ராஜிதவிடம் CID 4 மணி நேர விசாரணை


1577374721-Rajitha-hospitalized-B

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன 4 மணி நேர விசாரணையின் பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜித சேனாரத்ன இன்று (14) முற்பகல் 11.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற பின்னர் மாலை 3.20 மணிக்கு அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் இவரிடம் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>