போயா தினத்தில் மாடறுப்பும் – ஹிஜ்ரா காலண்டரின் தீர்வும்


HijraCalendar_1

பிறையைக் கணக்கிடுவது தொடர்பாக அழைப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் அமர்வொன்றை இந்தியா, ஹிஜ்ரா கொமிட்டி ஆய்வாளர்கள் கடந்த மே 02ஆம் திகதி சனிக்கிழமை புத்தளம் நகரில் நடத்தினார்கள்.

அஹ்மத் ஸாஹிப் தலைமையில் புத்தளம், Hallam City College கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ் அமர்வில் பிறை ஆய்வாளர்களான சுபைர் பிர்தௌசி, அப்துர் ரஷீத் (ஸலபி), அப்துல் காதிரி (உமரி), அஹ்மத் உஸ்மானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிறையை தினமும் கணக்கிடுதல் சம்பந்தமாக புனித அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களுடன் குர்ஆன் விளக்கவுரைகளான தஃப்ஸீர் இபுனு கதீர், தஃப்ஸீர் அல்மனார் ஆகியவற்றையும் ஷாஃபியீ, ஹனஃபி மத்ஹபுகளின் அறிஞர்களான இமாம் ஸுப்கி மற்றும் கல்யூபி ஆகியோரின் கூற்றுக்களையும் ஆதாரங்களாக முன்வைத்தனர். ‘கணிப்பு தோராயமானது, கணக்கு தீர்க்கமானது, கண்ணால் பார்ப்பது கற்பனையானது’ இமாம் ஸுப்கியின் கூற்றாகும்.

இலங்கை அரசாங்கம் போயா (பௌர்ணமி) தினமாக குறிப்பிடும் தினத்துடன் சூரியன் அஸ்தமனமான பின் பிறையைப் புறக் கண்களால் பார்த்து மறுநாளைக் குறிப்பிடுவதினால் ஏற்படும் குழப்ப நிலையையும் சுட்டிக்காட்டினார்கள். உதாரணமாக: புறக் கண்களால் பார்த்து ஆரம்பமான துல் ஹஜ் மாதம் பிறை 10 க்கு காலண்டரில் பிறை 12 குறிப்படப்பட்டிருக்கும். காலண்டர் பிறை 13 போயா தினமாகும். இத்தினம் குர்பான் கொடுக்கும் பிறை 10, 11, 12, 13 ஆம் நாட்களுக்குள் அகப்படும். இதன் காரணமாக இன-சமய ரீதியான அசௌகர்யங்கள் ஏற்படுவதுண்டு. பிறையைக் கணக்குப் பார்த்து தயாரிக்கப்படும் காலண்டரில் மேற்குறிப்பிட்ட நாட்களின் வித்தியாசக் குழப்பம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவானது.

ஆரம்ப கால முஸ்லிம்கள் பிறையைக் கணக்கிட்டு நேர்த்தியான காலண்டரை கையாண்டுள்ளனர். பிற்காலத்தில் பிறையைக் கணக்கிடுவதில் இருந்து முஸ்லிம்களை வழிபிறழச் செய்தவர்கள் ஷியாக்கள் என்பதற்கு ஆதாரமாக இமாம் இபுனு ஹஜர் அஸ்கலானியின் ஃபத்ஹுல் பாரி (ஸஹீஹுல் புகாரிக்கான விளக்கவுரை) நூலில் இல. 1807 ஹதீஸை முக்கியமான ஆதாரமாக முன்வைத்தனர்.

இப் பயிற்றுவித்தல் அமர்வில் புத்தளத்தைச் சேர்ந்த உலமாக்கள், பல்துறை கல்விமான்கள் உட்பட பொது மக்கள் கலந்துகொண்டனர். விருதோடை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் ஐ.எம். நிசார் ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றினார். (ஸ)

– ஹிஷாம் ஹுசைன் –

HijraCalendar_1 HijraCalendar_2 HijraCalendar_3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>