மனிதன் அபிவிருத்தியடையும்போது சூழலை அழித்து விடக்கூடாது – ஜனாதிபதி


Screen Shot 2016-01-07 at 12.42.09 PM

இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களதும் இருப்பின் மீது காலநிலை மாற்றங்களின் தாக்கம் பாரியளவு செல்வாக்கு செலுத்தியுள்ள இக்காலகட்டத்தில் நீலப் பசுமை யுகத்தை நோக்கி இலங்கையை பயணிக்கச் செய்வது எமது அடுத்த இலக்காக அமைய வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

எச்சந்தர்ப்பத்திலும் மனிதன் அபிவிருத்தி அடைந்து செல்கின்றபோது சூழலை அழித்து விடக்கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ”நீலப் பசுமை யுகத்திற்காக” எனும் உறுதிமொழியினை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

”நீலப் பசுமை யுகத்திற்காக” நிகழ்ச்சித்திட்டமானது புவி வெப்பமடைதல் அதிகரிப்பை இரண்டு பாகை வரை குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்த COP 21 மாநாட்டின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக இலங்கையர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு முன்னெடுக்கப்படும் ஒரு நீண்டகால நிகழ்ச்சித்திட்டமாகும்.


05

04

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி;
நிலையான அபிவிருத்தி என்பது இன்று முழு உலகினதும் கவனம் ஈர்க்கப்பட்ட ஒரு விடயமாகும். பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து பொருத்தமற்றவற்றை நிராகரித்து நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு அனைவரும் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் எமக்குத் தவறியவற்றை மீட்டிப்பார்க்காது நாளைய உலகிற்காக தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரியவாறு நிறைவேற்றுவதே நாம் இன்று மேற்கொள்ளவேண்டிய பணியாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

தாவரங்கள், உயிரினங்கள், ஏனைய அனைத்து இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, பாரிஸ் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் சர்வதேச காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் வழங்கிய உறுதிமொழியினை நிறைவேற்றுவதற்கு இலங்கை பிரஜைகள் என்ற வகையில் எம்மை அர்ப்பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீலப் பசுமை யுகத்தை நோக்கி இலங்கை “நெக்ஸ்ட்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைத்து அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தை ஜனாதிபதி, அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள், சூழலியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், அதிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (ஸ)

02 03 06 07

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>