ஸக்கியா ஸித்தீக் பரீதின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா


dd0974b8-4c23-46f2-affd-77d6d9255257

ஓய்வு பெற்ற ஆசிரியை கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பு -09 தெமட்டகொட, வை.எம்.எம். ஏ பேரவையில் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில், புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் இடம்பெறும் இவ்விழாவில், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல் -ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். ஸமீல்(நளீமி), பேராதனை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹீம்(எம்.ஏ), அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவரும் ஜம்மியத்துல் ஷபாப்பின் உதவிப் பணிப்பாளருமான தேசமான்ய மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம்(கபூரி), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ தேசியத் தலைவர் அல்- ஹாஜ் சாதிக் சலீம்(ஜே.பி), ஸ்ரீலங்கா முஸ்லிம்
மீடியா போரத்தின் உப தலைவரும் தினகரன் ஆலோசகருமான எம்.ஏ.எம்.நிலாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சிறப்பு அதிதிகளாக மலேசியத் தூதுவராலய விஸா அதிகாரி மர்யம் அம்ஹர் ஷெரீப், ஜாமிஆ நளீமியா நிர்வாக சபை உறுப்பினர் அல்- ஹாஜ் எம்.இஸட்.எம்.ஸவாஹிர், வை.டபிள்யு.எம்.ஏ. மாவனல்லைக் கிளை தலைவி
ஹாஜியானி ஆயிஷா அஸீஸ் மஹ்ரூப், வை.டபிள்யு.எம்.ஏ தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில், வை.டபிள்யு.எம்.ஏ பொருளாளர் தேசமான்ய பவாஸா தாஹா, அஷ்ஷபா ஹஜ் உம்ரா சேர்விஸ் பணிப்பாளர் தேசகீர்த்தி ஹாஜியானி இனாயா பாரூக் , கோல் கேட்டர்ஸ் பிரைவட் லிமிடட் உரிமையாளர் அல் -ஹாஜ் சப்ரி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்தோடு விழாவில் வரவேற்புரையை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.அமீர் ஹுசைன்(ஜே.பி),கருத்துரையை கலாபூஷணம் வைத்தியக் கலாநிதி தாஸிம் அஹமது,
சிறப்பதிகள் உரையை மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹீம்(எம்.ஏ) மற்றும் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம்(கபூரி), வாழ்த்துரையை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கவி வாழ்த்து நவமணி சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினர் காவ்யாபிமானி தாஜுல் உலூம் கலைவாதி கலீல் மற்றும் கவிதாயினி நூருல் அய்ன் நஜ்முல் ஹுசைன், நூல் அறிமுக உரை ஓட்டமாவடி அரபாத் துஆப் பிரார்த்தனை கொழும்பு மாவட்ட முன்னாள் இஸ்லாம் பாட
ஆலோசகர் மௌலவி எம்.ஏ.எம். இப்லால்(பாரி)யும் நிகழ்ச்சித் தொகுப்பை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர்களான கியாஸ் ஏ. புஹாரி மற்றும் பா.மலரம்பிகை, நன்றியுரையை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் எம்.எஸ்.எம்.சாஹிர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். இந்நூல் நூலாசிரியரின் 6ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.(ச)

– எம்.எஸ்.எம்.சாஹிர் –


dd0974b8-4c23-46f2-affd-77d6d9255257

f49bf44c-579c-4fed-93c4-db14d1f62502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>