Author Archives: dcadmin

நாளை கொழும்பின் கரையோர வீதிக்கு பூட்டு

1519209026-road-close_L

சைக்கிள் ஓட்டப் பந்தயம் காரணமாக நாளை (24) கொள்ளுப்பிட்டி முதல் வெள்ளவத்தை வரையிலான கரையோர வீதி மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 7.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையில் இந்த வீதி மூடப்பட்டிருக்கும் எனவும் போக்குவரத்துப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  (மு)

Read More »

நேற்று பதவியேற்ற பிரதமர் மீது இன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்

bb7b35e0d52046ceb748b45a2b166982_18

எத்தியோப்பியாவின் புதிய பிரதமர் அபீ அஹமட் கலந்துகொண்ட பொதுக் கூட்டமொன்றை இலக்குவைத்து இன்று (23) தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் பிரதமர் அவ்விடத்திலிருந்து பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் இத்தாக்குதலில் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அபீ அஹமட் எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக நேற்றைய தினம் ...

Read More »

ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை பெறும் விண்ணப்ப கட்டணம் 3 லட்சம் ரூபா

Passport-

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பக் கட்டணம் 3 இலட்சம் ரூபா எனவும்,  அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகளுக்கான கட்டணம் 50,000 ரூபா எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்காக வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து  சுமார் 1000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சு, ...

Read More »

16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்குள்- அமைச்சர் சரத் அமுனுகம

sarathh

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்தக் குழு கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்துகொள்வதாயின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சகல பொறுப்புக்களையும் விட வேண்டும் ...

Read More »

தேரரின் ஹிட்லர் கருத்தில் உள்ள மாயை இதுதான்- காவிந்த விளக்கம்

images

கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப் போவதாக பொய்யான ஒரு மாயையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கே கூட்டு எதிர்க் கட்சியும் அதன் பின்னால் உள்ள கடும்போக்காளர்களும் நாடகமாடுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ...

Read More »

உலக கிண்ண சம்பியன் ஜேர்மனுக்கு இன்று முக்கிய போட்டி

download

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இன்றைய நாள் ஆட்டத்தில் தற்பொழுது வரை உலக கிண்ண சம்பியனாகவுள்ள ஜேர்மன் அணி கலந்துகொள்கின்றது. இந்த முக்கிய போட்டி இன்று (23) இரவு இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டியில் ஜேர்மனுடன் சுவீடன் அணி களமிறங்கவுள்ளது. “எப்” குழுவில் போட்டியிடும் ஜேர்மன் அணி இம்முறை உலக கிண்ணப் போட்டியில், ...

Read More »

தேரரின் ஹிட்லர் ஆட்சி குறித்த கருத்து தவறு, வீதியில் இறங்க தயார்- குமார வெல்கம

kumara welgama

இந்த நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர் ஒருவர் தேவை என முக்கிய மகாநாயக்க தேர்களில் ஒருவர் கூறிய கருத்தை தெளிவாகவே மறுக்கின்றோம் என மஹிந்த சார்பு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். ஹிட்லர் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவாராக இருந்தால் அதற்கு எதிராக தனது உயிரைக் கொடுத்தாவது போராட தயாராகவுள்ளோம். இதற்காக கட்சியிலிருந்தும் ...

Read More »

கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையில் ஒருவர் கொலை

deathee

கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகாமையில்  கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைச் சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக ...

Read More »

தனிநபர் சுகாதார தகவல்கள் கணனி மயப்படுத்தப்படும்- சுகாதார அமைச்சர்

Rajithaaaa

நாட்டில் அனைத்து நபர்களினதும் சுகாதார நிலைமைகள் பற்றிய தகவல்களை கணனி மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் வளர்ச்சியடைந்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்.  தற்போதை அரசாங்கத்தின் கீழ் சுகாதாரத் துறையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ...

Read More »

உள்ளுராட்சி சபைகளை அரசாங்கம் ஆக்கிரமிக்க சதி- ஸ்ரீ.ல.பொ.ஜ.பெ. குற்றச்சாட்டு

Sri Lanka Podujana Peramuna SLPP

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் உள்ள உள்ளுராட்சி சபைகள் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக அரசாங்க தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவின் கீழ் உள்ள உள்ளுராட்சி சபைகளை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை ...

Read More »