Author Archives: Editor 02

சுகாதார துறையில் பாரிய முன்னேற்றங்கள்

rajitha senaratne

அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் சுகாதார துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடியும் என்று ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதோடு, கண் வில்லைகள் இலவசமாக வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும் என தொழிற்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

மகாசங்கத்தினரின் ஆலோசனைக்கமைய செயற்பட்டால் நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி

f59e2cb207756c5c3d05823a12a09b1d_XL

ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், பல உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ளும்போது எமது நாட்டில் சகல இனத்தவர்களும் மதத்தவர்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலொன்று ...

Read More »

33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் வடக்கு ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

007

வவுனியா அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் இந்திய அரசின் 33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் இன்று (19) முற்பகல் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டார்.(அ)

Read More »

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தடை

Screen Shot 2019-06-19 at 10.58.54 AM

மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சுற்றாடலுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த இயந்திரங்களை இறக்குமதி செய்வது முற்றாக தடை செய்யப்படவுள்ளது. மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக ஜனாதிபதி மைத்ரிபால ...

Read More »

வெலிகந்த பகுதியில் கோர விபத்து – 4 பெண்கள் உட்பட ஐவர் பலி

1560911399-acciden-2

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெலிகந்த நோக்கி பயணித்த டிரக்டர் வண்டி ஒன்றை அதே திசையில் பயணித்த வேன் ஒன்று மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் டிரக்டரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளதுடன் ...

Read More »

சில பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை

rainy weather

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் ...

Read More »

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்பு

z_p28-Seminar

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது இதுதொடர்பான ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குமிடையில் ஜப்பானில் நாளை கைச்சாத்திடப்படவுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதுதெடர்பாக தெரிவிக்கையில் , இந்த ஒப்பந்தம் 10 வருடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தாதியர், கட்டடங்களை பராமரித்தல், ...

Read More »

இங்கிலாந்து அதிரடி ஆட்டம் – ஆப்கானுக்கு கடின இலக்கு

BKAYwIEJ

உலகக்கிண்ண போட்டித்தொடரின் 24வது போட்டி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியதுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ஓட்டங்களை குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய அணித்தலைவர் மோர்கன் 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் ஜோனி பைர்ஸ்டோ 90 ஓட்டங்களையும், ஜோ ரூட் 88 ஓட்டங்களையும் ...

Read More »

அமைச்சுப்பதவிகளை மீளப்பெறுவது தொடர்பான கலந்துரையாடல் இனக்கப்பாடின்றி நிறைவு

38ba55acbafd489cb31e14f7ece65e46_18

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்தலோசித்த போதிலும் இறுதியான ஒரு முடிவு எட்டப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். இன்று ...

Read More »

இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகராக ரொஷான் குணதிலக நியமனம்

D9VjqqRU0AI0MZ4

இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுத்தொடர்கள், வீரர்களின் பாதுகாப்பு, பயிற்சியாளர்கள், மைதான பாதுகாப்பு, ஆகியவை தொடர்பில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ரொஷான் குணதிலக கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.(அ)

Read More »