Author Archives: Editor 02

அமித் வீரசிங்க கைது

1537518761_9250447_hirunews_Amith-weerasinghe

மஹாசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

மினுவங்கொட வன்முறை – 13 பேர் கைது

IMG-20190514-WA0130

மினுவங்கொட நகரில் இனவாத கும்பலினால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார் இனவாத கும்பலினால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பள்ளிவாயல்கள் மற்றும் வீடுகள் பல தாக்கப்பட்டு பல சொத்துக்கள் ...

Read More »

அஸ்கிரிய பீடம் விசேட வேண்டுகோள்

1526881507-Warakagoda-Sri-Gnanarathana-Thero

வன்முறை செயற்பாடுகளினால் அரசியல்வாதிகளும் வெளிநாட்டு சக்திகளும் இலாபமடைவது மாத்திரமே இடம்பெறுவதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். அதனால் அனைவரும் அமைதியாகவும் சமாதானமாகவும் செயற்பட வேண்டுமென சங்கைக்குரிய வரகாகொட ஞானரதன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை இத்தகைய தருணத்தில் அனைவரும் சமயோசிதமாக செயற்பட வேண்டும் என பேராயர் மல்கம் ரஞ்சித் ...

Read More »

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு அமுலில்

CURFEW-2

நாடு முழுவதும் நேற்றிரவு 9.00 மணிதொடக்கம் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. கம்பஹா பொலிஸ் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடமேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடந்து அமுலில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.(அ)

Read More »

தொடர்ந்தும் பதில் பொலிஸ் மா அதிபராக C.D. விக்ரமரத்ன

Acting-IGP-Wickramaratne

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன தொடர்ந்தும் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்ற அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது தொடர்ந்தும் பதில் பொலிஸ் மா அதிபராக பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ...

Read More »

குளியாபிட்டிய பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

CURFEW-2

குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மீண்டும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் மீண்டும் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்தே மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் ...

Read More »

வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பம்

c0280bbf114ab54dbd779c2409a7d224_XL

வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அமைச்சின் சமய அபிவிருத்தி பணிப்பாளர் நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.(அ) -தகவல் ...

Read More »

இன விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

Untitled-2 copy

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு (12) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்; நாட்டில் அண்மையில் ...

Read More »

பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன

Ruwan-wijeyawardena-575-01(2)

பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதன் காரணமாகவே ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் சீன விஜயம் எதிர்வரும் 15ம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அதுவரை ருவன் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு

10429f7f8d60ef212c611d95e2c91c95896547c2

வெள்ளவாய, குடாஒய பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மேற்றும் ஒருதொகை தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. ரிபிடர் ரக துப்பாக்கிகள் 2, ஷொட்கன் துப்பாக்கிகள் 2 மற்றும் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை டீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 342, 75மில்லிமீட்டர் ரக தோட்டாக்கள் 6 மற்றும் 593 ஷொட்கன் ரக ...

Read More »