Author Archives: Editor 02

ஹொரவப்பொத்தானை பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்கியவருக்கு விளக்கமறியல்

jail

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை விடுவிக்குமாறு கோரி ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த நபர் தனது ...

Read More »

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

57bb796d4d240d43f9f56f7ffbb11878_XL

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுமென அதன் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தெரிவித்தார். மருத்துவ மற்றும் கால்நடைவள பீடங்களின் முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கும், பொறியியல் பீடத்தின் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், கணனி பொறியியல், விவசாய மற்றும் சுகாதார பீடங்களின் மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகும். சப்ரகமுவ மற்றும் ...

Read More »

பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு

IMG20190521073740

இன்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியான முறையில் இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பாடசாலை பாதுகாப்பு குழு என்பன இணைந்து இன்று பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளை எந்தவித அச்சமுமின்றி பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் பிரதமர் ரணில் ...

Read More »

சிலை உடைப்பு விவகாரம் – சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

DM_20181231_A001-11

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 13 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(அ)

Read More »

ரிஷாடுக்கு எதிராக வாக்களிக்கவுள்ள ஐ.தே.க அமைச்சர்

UNP

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை தான் ஆய்வு செய்ததாகவும், தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவத்தளபதி தெரிவித்திருப்பதன் காரணமாகவும் நம்பிக்கையில்லா ...

Read More »

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பம்

23b6dd46f0f81865b1dfdc6497c200e1_XL

2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் இடாப்பை தயாரிப்பதற்கான மாதிரிப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பூரணப்படுத்தி கிராம உத்தியோகத்தர்களிடம் வழங்குமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.(அ)

Read More »

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

1537938188-sri-lanka-parliament-2

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்

WhatsApp Image 2019-05-20 at 6.41.11 PM

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) பிற்பகல் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 09 விவசாய போதனாசிரியர்களுக்கான ...

Read More »

தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்

wpid-Ministry_of_Education.jpg

பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர் எதுவித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.(அ) -தகவல் திணைக்களம்-

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 89 பேர் கைது

NEGOMBO, SRI LANKA - APRIL 21: Sri Lankan officials inspect St. Sebastian's Church in Negombo, north of Colombo, after multiple explosions targeting churches and hotels across Sri Lanka on April 21, 2019, in Negombo, Sri Lanka. At least 207 people have been killed and hundreds more injured after multiple explosions rocked three churches and three luxury hotels in and around Colombo as well as at Batticaloa in Sri Lanka during Easter Sunday mass. According to reports, at least 400 people were injured and are undergoing treatment as the blasts took place at churches in Colombo city as well as neighboring towns and hotels, including the Shangri-La, Kingsbury and Cinnamon Grand, during the worst violence in Sri Lanka since the civil war ended a decade ago. Christians worldwide celebrated Easter on Sunday, commemorating the day on which Jesus Christ is believed to have risen from the dead. (Photo by Stringer/Getty Images)

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவிலும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.(அ)

Read More »