Author Archives: Editor 02

மின்சார பாவனையாளர்களுக்கு விசேட வேண்டுகோள்

power-cut-in-Delhi-India-in-summer-season-415x260

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து விடும்படி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன பொதுமக்களை கேட்டுள்ளார். நீர் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வரும் அதேவேளை, பொதுமக்களின் மின்சார பாவனை அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு

big onion

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான சுங்க வரி 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இதுவரை இருந்த 20 ரூபாவாக அறவிடப்பட்ட சுங்க வரி தற்போது 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயம் கிராமிய பொருளாதாரம் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் ...

Read More »

குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார் ரிஷாட்

Rishad bathiudeen

தீவிரவாதத்திற்கும் இனவாதத்திற்கும் ஆதரவு வழங்கியதாக தன மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தான் ஒரு போதும் தீவிரவாதத்திற்கோ இனவாதத்திற்கோ ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் அவற்றிற்கு எதிராக செயற்பட புன்னிற்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சகோதர மொழி ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

தலதா மாளிகைக்குள் தீ பெட்டி எடுத்துச்செல்லத் தடை

dalada maligawa 2

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் தீ பெட்டி, லைட்டர், மற்றும் தீ பற்றவைக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான கட்டிடம் பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக அதன் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தடை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் விளக்கு மற்றும் வாசனைகூறுகள் பற்றவைப்பதற்காக பிரதான கட்டிடத்தின் நுழைவாயிலில் ஏற்பாடுகள் ...

Read More »

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள் – இராணுவத்தளபதி

Mahesh Senanayake

பிள்ளைகளை நாளை முதல் எந்தவித அச்சமுமின்றி பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாக பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

எனக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகளே உள்ளனர் – ருவன் விஜேவர்தன

Ruwan-wijeyawardena-575-01(2)

அண்மையில் மினுவாங்கொடை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தனது பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மினுவாங்கொடை பிரதேசத்திற்கான அமைச்சரின் விஜயத்தின் போது அதிகளவான படை வீரர்களுடன் அதிக பாதுகாப்பில் செல்லும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் அமைச்சர் ருவன் விஜேவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ...

Read More »

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Parliament 2

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ளது. குறித்த பிரேரணை நாளை சபாநாயகர் கரு ஜயசூரிய விடம் சமர்ப்பிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.(அ)

Read More »

புர்காவை சட்டத்தின் மூலம் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – மங்கள

mangala-samaraweera

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்கா அணிவதை சட்டத்தின் மூலம் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் தாமாக முன்வந்து புர்கா அணிவதை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். பொது சட்டம் அல்லது ...

Read More »

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை

1510311789-examination_department_5

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 20 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6000 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 31ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Read More »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் எதிர்ப்பு

united-national-party-unp-sri-lanka-logo

ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் எம்.பி க்கள் சிலர் பயங்கரவாத எதிரிப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வந்துள்ளதுடன் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தங்களுடன் முன்வைக்க வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பயங்கரவாத ...

Read More »