Author Archives: Editor 02

காலி மேயராக மீண்டும் மெத்சிறி ; நீதிமன்றம் உத்தரவு

meth

காலி மாநகர சபையின் முன்னாள் மேயர் மெத்சிறி டி சில்வாவை மீண்டும் அப்பதவியில் இணைத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் மாகாண மேல் நீதிமன்றமே இன்று (26) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் தென் மாகாண முதலமைச்சர் இவரை பதவி நீக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது. (ரி)

Read More »

அளுத்கம மீள்கட்டமைப்பு ; 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

alu

அளுத்கம வன்முறையில் சேதங்களுக்குள்ளான வீடுகள்,கடைகளின் மீள் கட்டமைப்புக்காக அரசு 150 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க தெரிவித்தார். தெஹிவளையில் நேற்று (26) நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்,இந்த மீள்கட்டமைப்புப் பணியை இராணுவமே மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.(ரி)

Read More »

முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் அல்லர் என்பதை நாம் அறிவோம் – இராணுவத் தளபதி

daya12

முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் அல்லர் என்பதை நாம் அறிவோம்.ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்படுவதென்பதையும் கூறாமல் இருக்க முடியாது. இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் இராணுவம் நூறுவீத பாதுகாப்பை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கா தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கிளை அமைப்பான ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்சில்,தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று ...

Read More »

கனடா வாழ் புலி உறுப்பினரைக் கைது செய்ய இன்டர்போல் உதவி

interpol

கனடாவில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளது முக்கிய உறுப்பினரான கனகராஜ் ரவிசங்கரை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இன்டெர்போல் சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . 1996,97 மற்றும் 99 காலப்பகுதியில் இவர் புலிகளுக்கு மூன்று கப்பல்களில் ஆயுதம் எடுத்து வந்த குற்றச்சாட்டில், இவருக்கு 30 வருட சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல்நீதிமன்றம் நேற்று ...

Read More »

ஐ.நா.விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்து

us

ஐ.நாவின் மனித உரிமை ஆணையக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமெரிக்கா இலங்கையை நேற்றும் (25) வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.விசாரணை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் நேற்றைய தினம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகம்,மனித உரிமை,நீதி மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா,இலங்கை மீதான ...

Read More »

இலங்கை – மாலைதீவுக்கு இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

mal

இலங்கை – மாலைதீவு நாடுகளுக்கிடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யமி முன்னிலையில்,மாலேயில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில்  நேற்று (25)இவ்வொப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுகாதாரம்,முதலீட்டு ஊக்குவிப்பு,கடல் பாதுகாப்பு தொடர்பிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் இவ்வொப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(ரி)

Read More »

பாகிஸ்தான் விமான தாக்குதல் ; இலங்கை பலத்த கண்டனம்

pia

பாகிஸ்தான் சிவிலியன் விமானம் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு இலங்கை அரசு பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவரில் நேற்று மாலை இடம்பெற்ற இத்தாக்குதலில் ஒரு பெண்மணி கொல்லப்பட்டதோடு,மூவர் காயங்களுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.(ரி)

Read More »

ஆனந்தி உட்பட்ட மூவரின் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்

ananthi

வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் உட்பட மூவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு,  நேற்று புதன்கிழமையுடன் (25) வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவது தொடர்பில் பொலிஸ் பாதுகாப்புப் பெற்ற உறுப்பினர்களுக்கு யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், கடிதம் மூலம்  தெரிவித்துள்ளார்.வடமாகாண சபை உறுப்பினர்களாக பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் ...

Read More »

அளுத்கம இன வன்முறை ; இதுவரை 68 பேர் கைது

ars

அளுத்கம வன்முறை தொடர்பில் இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 40 பேர் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.(ரி)

Read More »

ஜனாதிபதிக்கு மாலைதீவில் பெருத்த வரவேற்பு

mahee

மாலைதீவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை மாலைதீவு இப்ராஹிம் நஜீர் சர்வதேச வானூர்தி தளத்தை அடைந்தார். மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூமின் அழைப்பிற்கிணக்க ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுவருக்கு மாலைதீவு ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளால் ...

Read More »