Author Archives: Editor 03

சந்திரிக்காவுக்கு நாமல் வாழ்த்து

image_aaa66c3f47

பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருதை பெற்றுக்கொண்டமைக்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியில் எத்தகைய வேறுபாடு காணப்பட்டாலும் வாழ்த்து தெரிவிப்பதாக, நாமல் ராஜபக்ஷ தனது ரிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு குறித்த விருது நேற்றைய தினம் (20), வழங்கி ...

Read More »

இரத்தினபுரியில் இளைஞன் கொலை – நீதிகோரி ஆர்ப்பாட்டம்

fffff

இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராகப் போராடிய இளைஞன் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராகப் போராட்டங்களை நடாத்தி வந்த தனபால் விஜேரத்னம் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் ...

Read More »

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரைக் காணவில்லை?

missing+person+generic5

கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ளாரென, நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ் நிலையங்களில் இன்று (21) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே காணாமல் போயுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (20), விடுமுறை பெற்று வீட்டுக்குச் ...

Read More »

தங்காலையில் விபத்து – இத்தாலி பிரஜை பலி

2077812458dead_body

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உணாகூருவ பகுதியில், இன்று அதிகாலை (21), இடம்பெற்ற விபத்தில், இத்தாலி பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய, பென்சிஸ்கோ செனொட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தங்காலையிலிருந்து திக்வளை நோக்கி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து,மோட்டார் சைக்கிள் தடம்புரண்டதால், படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இவர் உயிரிழந்துள்ளார். ...

Read More »

வீடொன்றுக்குள் இருந்து 17 பாம்புக்குட்டிகள் மீட்பு

snake

பதுளை பதுளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் இருந்து, 17 பாம்புக் குட்டிகளை, வீட்டின் உரிமையாளர், இன்று (21) காலை மீட்டுள்ளார். பாம்புகளைப் பிடிப்பதில் பரீட்சயமான ஒருவரை வரவழைத்துள்ள வீட்டுரிமையாளர், அவரது உதவியுடன், பாம்புக்குட்டிகளைப் பிடித்து போத்தலொன்றில் அடைத்துள்ளதுடன், அவற்றை அருகிலுள்ள வனத்தில் விடுவித்துள்ளார். இது தொடர்பில் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ச)

Read More »

முன்னாள் ஜனாதிபதிக்கு பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது

image_ff44b1c0bf

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருதைப் பெற்ற, முதலாவது இலங்கையராகச் சந்திரிக்கா திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ச)

Read More »

ஒலுவில் மீனவர்களின் பிரச்சினை – அடுத்த வாரம் அமைச்சரவை மூலம் தீர்வு

oluvil-1-620x300

அம்பாறை – ஒலுவில் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக அடுத்த வாரம் அமைச்சரவை மூலம் தீர்வு காணப்படவுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுக அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஸ்ரீலங்கா ...

Read More »

ஐ.நா பொது கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா பயணம்

Address by His Excellency Maithripala Sirisena, President of the Democratic Socialist Republic of Sri Lanka

ஐக்கிய நாடுகளின் 73 பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு பயணமாகவுள்ளார். அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரை நோக்கி நாளைய தினம் ஜனாதிபதி பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகளின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நியாயமான சமாதானமான மற்றும் நிரந்தர சமூகத்திற்கான உலக தலைவர்களின் பொறுப்புகள் என்ற தொனிப்பொருளின் கீழ் ...

Read More »

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இராணுவ வீரர் கொலை

1517292304-murder-L

அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் ஆயுதம் ஒன்றால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த கொலை தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

Read More »

உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

udaya gammanpila

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்கு, இரண்டுவார காலத்துக்கு வெளிநாடு சென்று வர, கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி, 21 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைச் செய்து நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு ...

Read More »