Author Archives: Editor 04

அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

image_675ff864a4

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 32,136 குடும்பங்களை சேர்ந்த 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிகிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சட்டவிரோதமாக பலா மரக்குற்றிகளை கொண்டு சென்ற லொறியை மடக்கி பிடித்த கம்பளை பொலிஸார்

vlcsnap-2018-05-24-14h17m37s507

விறகுடன் சட்டவிரோதமாக ஒரு தொகை பலா மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறியை கம்பளை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், வெலாம்பொட பகுதியில் இருந்து சட்டவிரோதமாக புஸ்ஸல்லாவ பகுதிக்கு விறகுடன் பலா மரங்களை மறைத்து வைத்து கொண்டு சென்ற போது, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ...

Read More »

மண்சரிவு – 8 குடும்பங்கள் இடம்பெயர்வு

DSC06013

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கவரவில தோட்டம் லோவ்கூர்டன் பிரிவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடுகள் இரண்டு பகுதியளவில் சேதமாகியுள்ளது. நேற்று (23) புதன்கிழமை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும், அத்தொடர் குடியிருப்பில் உள்ள ஏனைய ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்களும், மொத்தமாக 8 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் தோட்ட ...

Read More »

பதில் நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்

Untitled1

உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் நேற்று சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நு)

Read More »

மாலைதீவின் முன்னாள் இஸ்லாமிய விவகார அமைச்சர் கொழும்பில் காலமானார்

abdul majeed abul bari

மாலைதீவின் முன்னாள் இஸ்லாமிய விவகார அமைச்சரும் பிரபல மார்க்க அறிஞருமான கலாநிதி அப்துல் மஜீத் அப்துல் பாரி நேற்று இரவு கொழும்பில் காலமானார். 55 வயதான இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். குர்ஆன் விளக்கம் (தப்ஸீர்) தொடர்பில் கலாநிதிப்பட்டம் பெற்ற முதலாவது மாலைதீவு பிரஜை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ...

Read More »

வெள்ளத்தால் தத்தளித்துக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு கரம்கொடுக்க Caring Hands தயார்

adasa

அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உலருணவு, குடிநீர், மருத்துவ பொருட்கள் என்பவற்றை சேகரித்து வழங்குவதற்கு Caring Hands நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உங்கள் உதவிகளை பொருட்களாகவோ பணமாகவோ வழங்க முடியும். உங்கள் உதவிகளை பொருட்களாக வழங்குவதாயின் இல. 10, கவுன்சில் லேன், தெஹிவளை எனும் முகவரியில் ஒப்படைக்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை ...

Read More »

சாரதி பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் – ரொமேனிய மினி பஸ் லொறியுடன் மோதி 9 பேர் பலி (VIDEO)

romania

ரொமேனிய மினி பஸ் ஒன்று ஹங்கேரியில் லொறியொன்றுடன் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் நால்வர் ரொமேனியர்கள் என இனங்கனப்பட்டுள்ளதுடன் ஏனைய ஐவரும் ரொமேனியர்களாக இருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மினி பஸ் வண்டியின் சாரதி ஆபத்தான முறையில் வாகனமொன்றை முந்திச் செல்ல முயற்சித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதேவேளை விபத்து இடம்பெறும் வேளை ...

Read More »

மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

maithripala sirisena

ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வரும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சில கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்படும் விடயங்களுக்கேற்ப ஆசிரியர், மாணவர் தொடர்பு குறித்தும், ஆசிரியர்களின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், அநீதிகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த நிலைமை குறித்து அதிகாரிகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் ...

Read More »

கல்முனை வாழ் மாணவர்களிடம் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்

IMG-20180523-WA0024

கல்முனைக்கான மத்தியகிழக்கு அமையத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பு வருடாவருடம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திவரும் வறிய மற்றும் தேர்ச்சி மிகுந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்டமாக கடந்தவருடம் 2017ஆம் ஆண்டில் க.பொ.தா. சாதாரண தரம் எழுதி இவ்வருடம் 2018ல் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்காக வழங்கப்படும் புலமைப் ...

Read More »

குரீவெல முஸ்லிம் வித்தியாலயம் ராஜபக்ஷ கல்லூரியால் ஆக்கிரமிப்பா ?

kuriwela hameediya colege ukuwela

உலக வங்கியின் ஒரு கோடி 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உக்குவளை குரீவெல ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டட நிர்மாணப் பணிகள் அருகில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் தலையீட்டால் நின்றுபோயுள்ளதோடு, இவ்விடயம் குறித்து முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தும் தீர்க்கப்படாத நிலை தொடர்கின்றது. ஒரே எல்லையில் அமைந்துள்ள ...

Read More »