கலை / கலாசாரம்

நுஸ்ரி ரஹ்மாதுல்லாஹ்வின் கவிதை நூல், குறும்பட வெளியீட்டு விழா

12196324_1036654696399404_2013236688125831183_n

தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் புத்தளம் கவித்தீபம் நுஸ்றி ரஹ்மத்துல்லாஹ் எழுதிய “கடல் தேடும் நதி” கவிதைத்தொகுதி “பேசமறந்த வாா்த்தை குறுந்திரைப்படம் என்பனவற்றுடன் கலைஞர்கள் கௌரவிப்பு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை 21ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் கலாநிதி துறை மனோகரன், மக்கியா முசம்மில், ...

Read More »

கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு (Photos)

DSC01139

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது. சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (17) முருகப் ...

Read More »

கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீனுக்கு கலை, இலக்கிய, ஊடகத்துறைக்கான வித்தகர் விருது’ வழங்கி கௌரவிப்பு

IMG_4522_Fotor

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழா 2015ல் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் (முஹம்மட் இஸ்மாயில்) கலை இலக்கிய ஊடகத்துறைக்கான வித்தகர் விருதினை பெற்றுள்ளார். திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் (08.11.2015) ஞாயிறு மாலை மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டத்துறை அமைச்சர் சீ.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ...

Read More »

‘நாமும் கவிஞராவோம்’ : தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கவிதைப்பயிலரங்கு

Untitled

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை பிரிவு ஏற்பாடு செய்த ‘நாமும் கவிஞராவோம்’ எனும் தலைப்பிலான கவிதைப்பயிலரங்கு அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மூத்த கவிஞர் சோலைக்கிளி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி முடிவில் எடுத்த படத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் ஏ.பி.எம். அஷ்ரப், கிழக்கு பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் ஏ.ஆர்.ஜி. யோகராஜா, தென் ...

Read More »

ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கு

Screen Shot 2015-11-04 at 10.19.00 AM

ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கொன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய திரைப்பட மையத்தின் பங்களிப்புடன் இணைந்து தகவல் திணைக்களத்தின் அரசாங்க திரைப்பட பிரிவினரால் இதற்கென ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு இந்தியாவின் சென்னை ...

Read More »

கவிக்கொ அப்துல் ரஹ்மானின் பவள விழாவில் அமைச்சர் ஹக்கீம் குழு

Kaviko-single-image-800x445

தமிழ் நாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளையும் ( 26) நாளை மறுதினமும் (27) நடைபெறவுள்ள கவிக்கோ அப்துல் ரஹ்மானின் பவள விழாவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையிலான குழுவொன்று இந்தியா செல்கின்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள மலேசியா, சிங்கபூர், சவூதி அரேபியா, பேங்கொக்,  மஸ்கட், அபுதாபி, தமாம், அமெரிக்கா ...

Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு கிழக்கு மாகாண சாஹித்திய விருது

20151015_085627

சிரேஷ்ட ஊடகவியலாளரும், தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் 2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த நூலாக கவிஞர் ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என்வானமும் கவிதை நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியவாதியாகவும், ...

Read More »

பித்தன் ஷாவின் சிறுகதை தொகுதி சிங்களத்தில்

IMG_0002

பித்தன் என புனைப்பெயரால் அழைக்கப்பட்ட கே.எம். ஷா அவர்கள் ஈழத்தின் மறுமலர்ச்சி இலக்கிய காலகட்டத்தில் தோன்றிய ஒரு காத்திரமான படைப்பாளியாவார். மனித நேயத்தை அடிப்படை உணர்வாக கொண்ட அவரது சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதியொன்று சிங்கள மொழியில் வெளிவரவுள்ளது. இத் தொகுதியில் பாதிக் குழந்தை, தாம்பத்தியம், அமைதி மற்றும் இருட்டறை போன்ற அவரது முக்கியமான கதைகள் உள்ளடக்கப்படவுள்ளது. ...

Read More »

பம்­ப­லப்­பிட்டி புதிய கதி­ரேசன் ஆல­யத்தின் நவ­ராத்­திரி விழா

1121-600x400

நாட்­டுக்­கோட்டை நக­ரத்தார் பம்­ப­லப்­பிட்டி புதிய கதி­ரேசன் ஆல­யத்தில் எதிர்­வரும் 13 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நவ­ராத்­திரி விழா இடம்­பெ­ற­வுள்­ளது. தினமும் காலை 6 மணிக்கு அம்­பா­ளுக்கு அபி­ஷேகம் நடை­பெற்று காலை விசேட பூஜையும் நடை­பெறும். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சாய­ரட்சை பூஜை நடை­பெற்று வசந்த மண்­ட­பத்தில் கொலு வீற்­றி­ருக்கும் ...

Read More »

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய பால்குடபவனி (Photos)

DSC03011

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று காலை 10.00 மணிக்கு டிரைட்டன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சமய கலை, கலாசார நிகழ்வுகளுடன், பறவைக்காவடி, பாற்குடம், கற்பூரச்சட்டி ஆகியன ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். – படப்பிடிப்பு : க.கிஷாந்தன் –

Read More »