வணிகம்

2017 முதலாம் காலாண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 3.4 வீதத்தால் அதிகரிப்பு

Sri.Lanka_.Tourists

இலங்கையில் 2017 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 3.4 வீதத்தால் அதிகரித்துள்ளது. கிழக்காசிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் இந்த விருத்தி கணிக்கப்பட்டுள்ளது. எனினும் மார்ச் மாதத்தில் 2.5 வீதத்தால் குறைவடைந்துள்ளது. சீன சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 வீதத்தால் 22,172 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, இந்தோனேசிய பயணிகளின் ...

Read More »

71.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி பிங்க் ஸ்டார் வைரம் புதிய உலக சாதனை

C8kTLYUWsAEQmje

ஹொங்கோங் இல் ‘சோத்பை’ நிறுவனம் சார்பில் நடந்த ஏலத்தில் ‘பிங்க் ஸ்டார் வைரம்’ 71.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகி புதிய உலக சாதனை படைத்துள்ளது. 59.60 கரட் கொண்ட இந்த வைரம் உலகிலேயே மிகப்பெரியது என அமெரிக்காவின் ஜெம்மாலஜிகல் நிறுவனம் தெரிவித்துள்ளது. முட்டை வடிவிலான இந்த வைரம் 11.92 கிராம் எடையும் கொண்டது. இது ...

Read More »

இலங்கையின் கோஸ்வே பெயிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய இந்தியாவின் ஏசியன் பெயிண்ட்

இந்தியாவின் ஏசியன் பெயிண்ட் இலங்கையின் கோஸ்வே பெயிண்ட் நிறுவனத்தை 9 பில்லியன் ரூபாய் பெறுமதிக்கு கொள்வனவு செய்துள்ளது. கோஸ்வே பெயிண்ட் நிறுவனத்தின் 100%யும் 3.87 பில்லியன் இந்திய ரூபாய்க்கு ஏசியன் பெயிண்ட் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக பங்குப் பரிவர்த்தனை அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சந்தையில் காணப்படும் ஏசியன் பெயிண்ட் (லங்கா) நிறுவனத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ...

Read More »

5G இணைய கேந்திரம் இலங்கையில் அறிமுகம்

Screen Shot 2017-04-04 at 3.25.03 PM

தெற்காசியாவில் முதன் முறையாக 5G Internet of Things (IOT) மூலோபாய மைல்கல்லாக ICT கூட்டுத் தொழில்முனைவோரை குறிக்கோளாகக் கொண்டு மொபிடெல் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு ஆகியன இணைந்து Ericsson உடன் 5G இணைய கேந்திரத்தை அறிமுகப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த 5G இணைய கேந்திரம் அறிமுகமானது, நாட்டின் தகவல் தொடர்பாடல் ...

Read More »

காகில்ஸ் நிறுவனத்தின் புதிய பாற்பண்ணை திறந்துவைப்பு

zsczzxz

தேசிய பால்சார் உற்பத்திக் கைத்தொழிலுக்கு பாரிய முதலீட்டை சேர்க்கும் வகையில் காகில்ஸ் நிறுவனத்தினால் மீரிகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொத்மலை புதிய பாற்பண்ணையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (03) முற்பகல் திறந்து வைத்தார். நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய பாற்பண்ணையை திறந்துவைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார். காகில்ஸ் நிறுவனத்தின் “சருதின” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ...

Read More »

Fashion Bug இன் புதிய கிளை வெள்ளவத்தையில் திறந்து வைப்பு (Video)

Screen Shot 2017-03-23 at 2.33.09 PM

இலங்கையின் பிரபல நவநாகரிக ஆடைகளைக் கொண்ட முதன்மை வர்த்தக நிறுவனமான Fashion Bug, தனது 18ஆவது கிளையை இலக்கம் 38 காலி வீதி, வெள்ளவத்தை இன்று காலை வெகு விமர்சையாகத் திறந்தவைத்தது. 1994 ஆம் ஆண்டு பண்டாரவலையில் ஆரம்பிக்கப்பட்ட Fashion Bug நிறுவனம் கடந்த 22 வருடங்ளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை வென்று, தரமான ஆடைகளை நியாயமான ...

Read More »

Fashion Bug இன் புதிய கிளை வெள்ளவத்தையில்

Fashion Bug

இலங்கையின் பிரபல ஆடை விற்பனை நிறுவனமான Fashion Bug இன் புதிய கிளை வெள்ளவத்தையில் திறக்கப்படவுள்ளது. இலக்கம் 38 காலி வீதி, வெள்ளவத்தையில் நாளை (23) காலை 10 மணிக்கு Fashion Bug இன் புதிய கிளை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Read More »

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகிறார்

imf-chairman

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் க்றிஸ்டின் லகார்டே ( Christine Lagarde) அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் முதல்வாரத்தில் இலங்கைக்கு வரும் க்றிஸ்டின், பல்வேறு தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இவரது வருகை தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில், திறைசேரி அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று ...

Read More »

ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு ISO தரச் சான்றிதழ்

HAC

ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (HAC) இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தால் (SLSI) ISO 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தில் வைத்து பணிப்பாளர் காமினி தர்மவர்தனவினால் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் சர்வதேச விவகார தலைவர் எம்.ஜே.எம். பாரியிடம் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது ஹலால் சான்றுறுதிப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பளார் அலி ...

Read More »

நேற்றும் வரலாற்றில் இடம்பிடிக்கும் அளவு டொலரின் பெறுமதி அதிகரிப்பு

dollar

இலங்கை மத்திய வங்கி நேற்று (23) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 154.21 ரூபாவாக அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி இவ்வளவு கீழ் நோக்கிச் சென்றுள்ளது இதுவே முதல்தடவை என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 22 ஆம் திகதி ரூ. 153.56 சதமாக ...

Read More »