செய்திகள்

இலங்கை – வியாட்நாம் இடையிலான உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை

db2f5413e33c615b629a15a7a2ff5752_L

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில் இருதரப்பு வர்த்தக, சமூக, பொருளாதார உறவுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வியட்நாம் பிரதமர் ஹூயன் ஸ்சுவானுக்கும் இடையில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் ...

Read More »

டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

rtx177d2-jpg

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்ப்புக்கு எதிராக இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய சோசலிச கட்சி ஏற்பாடு செய்திருந்தது. (ஆ)

Read More »

பிரதமர் – சயிட் அல் ஹசெய்ன் சந்திப்பு

lead-box-2-Ranil-meets-Prince-Zeid-al-Hussein-@-Temple-Trees

இலங்கையில் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹசெய்ன் தெரிவித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோசில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்யக் ...

Read More »

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது இளைஞன் பரிதாப மரணம்

Close up of wasp

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் நேற்று பகல் 2.00 மணியளவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் உயிரிழந்தவர் கிங்கொரா தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை ஸ்டீபன் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த ...

Read More »

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார பிணையில் விடுதலை

sarath kumara gunaratne

நீர்கொழும்பு கடல்நீரேரி வளர்ச்சி யோசனை நடவடிக்கைக்கு ரூபாய் 112 இலட்சத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர், ...

Read More »

காலி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு

Traffic-police-612x330

காலி கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு இன்று பிற்பகல் 4 மணிமுதல் இரவு 10 மணிவரை கட்டுப்பாடு விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மொரட்டுவை புனித செபஸ்டியார் ஆலய வருடாந்த திருவிழா காரணமாக இந்தப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.(ஆ)

Read More »

இலங்கையில் முதலீடு செய்யத் தயாராகும் அலிபாபா நிறுவனம்

Screen Shot 01-19-17 at 04.29 PM

உலகில் பிரபல்யமான சீனாவின் அலிபாபா நிறுவனம், இ-கொமர்ஸ் துறையில் இலங்கைக்கு முதலீடு செய்ய தயாரகவுள்ளது என இலங்கை நிதி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவரான ஜாக் மா மற்றும் இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜாக்மா இது தொடர்பில் ...

Read More »

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பு இன்று

donald-trump

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் என விமர்சிக்கப்படுகின்றார். முஸ்லிம் எதிர்ப்பு சிந்தனையுடன் தேர்தல் களத்தில் செயற்பட்ட இவர், ஜனாதிபதியாக வந்ததும் ...

Read More »

2020 இல் இலங்கைக்கு 2 லட்சம் பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள்

2009-05-29-AirFrance

எதிர்வரும் 2020 ஆகும் போது இலங்கைக்கு வரும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சத்தினால் அபிவிருத்தியடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மெரின் சூ தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து சுமார் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வருடத்தில் சுமார் 40 ...

Read More »

ஸ்ரீ லங்கன் விமான சேவை இரகசியங்கள் ஓரிரு தினத்தில் வெளிவரும்- கபீர் ஹாசிம்

kabeer

ஸ்ரீ லங்கன் விமான சேவையை நட்டமடையச் செய்தவர்களை இன்னும் ஓரிரு தினங்களில் வெளிப்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானமொன்றைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையொன்றை அமைச்சரவை அனுமதியில்லாமல் ரத்து செய்ததன் மூலம், அரசாங்கத்துக்கு 150 மில்லியன் ரூபாவை நஷ்டம் ஏற்படுத்தினார் என கூட்டு எதிர்க் ...

Read More »