செய்திகள்

ஈராக்கிலுள்ள குவைட் பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு

kuwait

ஈராக்குக்கு வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு ஈராக்கிலுள்ள குவைட் தூதரகம் குவைட் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஸ்தீரமற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஈராக்கில் பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்து தங்கியிருக்கும் அனைவருக்கும் குவைட்டுக்கு செல்லுமாறும் குவைட் தூதரகம் மேலும் அறிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் ...

Read More »

கழிவுத் தேயிலை சுற்றிவளைப்புக்கு ஒத்துழையுங்கள் – DIG லதீப் வேண்டுகோள்

latheefff

கழிவுத் தேயிலை வியாபாரத்தை ஒழிப்பதற்கு தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார். கழிவுத் தேயிலை ஒழிப்பு தொடர்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட 270 சுற்றிவளைப்புகளில் 446 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 38,44,074 கிலோ கிராம் கழிவுத் தேயிலையும் ...

Read More »

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை நெரிசலை நீக்க திட்டம்

highway7

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசலை சமாளிக்க நெடுஞ்சாலை வசதிகளை விரிவுபடுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. கடந்த பண்டிகைக் காலப்பகுதிகளில், பெறப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தடையின்றி பொதுமக்களுக்கு வசதிகளை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, பின்னதூவ, கொடகம, கொட்டாவ, கடவத்த உள்ளிட்ட வாகன நுழைவாயில் ...

Read More »

சஜித் குறித்து ஐ.தே.க.யின் மறுசீரமைப்புக் குழு முக்கிய தீர்மானம்

UNP

எதிர்க் கட்சித் தலைவர் பதவியுடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பொறுப்பையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழு தீர்மானம் எடுத்துள்ளது. இந்த தீர்மானத்தை இவ்வாரத்துக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அக்குழு அறிவித்துள்ளது. கட்சியை ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியின் பின்னர் ...

Read More »

நட்டத்தில் இயங்கினாலும் மின்சாரம், போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படா- மஹிந்த

image_14bcaa601d

தனது அமைச்சின் கீழ் உள்ள 19 நிறுவனங்களில அதிகமானவை நட்டத்தில் இயங்குபவை எனவும், நட்டத்தில் இயங்கினாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரம், போக்குவரத்து என்பவற்றுக்கான கட்டணங்களை அதிகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (15) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் ...

Read More »

வடக்கில் தமிழ் தேசிய கட்சி உதயம்- எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவிப்பு

image_0eda4dba3a

டெலோ அமைப்பிலிருந்து விலகிய ஸ்ரீகாந்தனின் தலைமையில் தமிழ் தேசிய கட்சி எனும் பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று உதயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக டெலோ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புக்கள் உட்பட அரசியல் ரீதியிலான கோரிக்கைகளை முன்வைக்கும் சக்தியாக ...

Read More »

கட்சித் தலைவர் குறித்த யாப்புச் சட்டத்தை மாற்றுமாறு ரணில் பணிப்பு

ranil-wickremesinghe-l

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் யாப்பு ரீதியிலான சீர்திருத்தப் பணிகள் முன்னெடுக்குமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரபனவுக்கு இன்று (15) அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, கட்சியின் தலைமைத்துவத்துக்குள்ள அதிகாரம், அதன் பொறுப்புக்கள், ஆயுள் காலம் போன்ற பல்வேறு விடயங்களை அரசியல் யாப்பில் சீர்திருத்தம் செய்யும்படியும் ரணில் விக்ரமசிங்க ...

Read More »

இஸ்ரேலின் மொஸாட் பானியில் நிசாந்த சில்வா சுவீஸுக்கு அனுப்பி வைப்பு -தகவல் கசிவு

swiss__embassy

நாட்டின் அரசியல் தலைவர்கள் உட்பட முன்னாள் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நோக்கில் உலகிலுள்ள முக்கிய மூன்று நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து இரகசியப் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் செல்வதற்கு சூட்சுமமான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிசாந்த சில்வா நாட்டிலிருந்து தப்பிச் செல்லவில்லை. ...

Read More »

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் நடவடிக்கை குறித்து ஐ.தே.க.யின் தலைவர் ரணிலிடம் முறைப்பாடு

Rajithaaaa

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகளினால் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதுள்ள மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் இழக்கப்பட்டு வருவதாக அக்கட்சி உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் சுவிஸ் தூதுவராலய ஊழியர் கடத்தல் தொடர்பில் ...

Read More »

ரணிலுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்ட சஜித் தரப்பு 26 பேர்

sajith

ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களுக்கு புதியவர்களை நியமித்தல், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடல் என்பவற்றுக்காக கட்சியின் மத்திய செயற்குழுவை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுமாறு தெரிவித்து அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பிலிருந்து 26 பேருடைய ஒப்பத்துடன் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் பிரதித் தலைவர் ...

Read More »