பிரதான செய்திகள்

புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த கவலை

mahind election

திடீனெ பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள    போதும்,  இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகள் குறித்து மேன்முறையீடு செய்வதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையிலேயே இதனை ...

Read More »

மஹிந்தவின் நன்றிக் கடன்: மைத்திரி அரசியல் அனாதை-பாட்டளி சம்பிக்க எம்.பி.

Minister_Patali_Champika_Ranawaka1

மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு கட்சி இல்லை. இன்று அவரை அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்துள்ளார். இன்று ...

Read More »

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனுக்களின் மீதான முடிவு இன்று

Screen Shot 2018-11-12 at 5.49.52 PM

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் முடிவு இன்று (12) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் நேற்று (12) காலை முதல் 10 இற்கும் மேற்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த ...

Read More »

ஆணைக்குழுவின் அதிகாரத்தை ஆணையாளர் நாயகத்துக்கு வழங்குவதில் கருத்து மோதல்

Election commission sri lanka

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தை தெளிவாக பெற்றுக் கொள்ளும் வரையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல், தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும்,  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பீ.சீ. பெரேராவுக்கு இவ்வாறு அதிகாரத்தை வழங்குவதற்கு ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுள் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் ...

Read More »

விலைக்கு வாங்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியே அமைச்சுப் பதவி வழங்கினார்- ரணில்

1538532295-ranil-wickremesinghe-norway-5

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்ட விலையின் பெறுமதியை ஜனாதிபதியே அறிந்து வைத்துள்ளார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி நேற்று (11) ஆற்றிய உரை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். தனது கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டணியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப் பக்கத்துக்கு எடுப்பதற்கு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதியே ...

Read More »

ஜனாதிபதியின் இன்றைய திடீர் விஜயம் (Photos)

11

துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இறுதி மகாவலி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்தை அடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய ...

Read More »

பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான மனு – விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

Screen Shot 2018-11-12 at 5.49.52 PM

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை (13) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ...

Read More »

தீர்ப்பு இன்று அல்லது நாளை – கபீர் ஹசீம்

kbr

பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு இன்று அல்லது நாளை வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷீம் தெரிவித்தார். தமக்கு சாதகமான நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்குமென தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் தற்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

Read More »

பரீட்சைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்

913cb88730ec007ec60bba635b128854_XL

பாடசாலை மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லாதவாறு பொதுத் தேர்தல் நடத்தப்படுமென கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டால் மக்களே அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும் இணைந்து செயற்பட முடியவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இவ்வாறான தீர்மானத்தை ...

Read More »

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – டவுன் ஹோல் பகுதியில் வாகன நெரிசல்

Traffic police sri lanka

டவுன் ஹோல் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.(அ)

Read More »