பிராந்திய செய்திகள்

ஊடகவியலாளர் சாஜஹானுக்கு சியன மீடியா வாழ்த்து

download

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாகிஸ்தான் விஜயத்தில் கலந்துகொண்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான சிராஜ் எம். ஸாஜஹானுக்கு கஹட்டோவிட்டாவில் இயங்கும் சியன மீடியா அமைப்பு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் பாகிஸ்தான் சென்ற குழுவில் தமது ...

Read More »

தலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DSC04140

தலவாக்கலை பெரிய மட்டுக்கலை தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை 10 மணிக்குத் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தோட்டத்தில் தொழில் புரியும் கள உத்தியோகத்தர் ஒருவருக்கும், தொழிலாளர் ஒருவருக்குமிடையில் கடந்த மாதம் 16 ம் திகதி முரண்பாடொன்று ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும், லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பாக பொலிஸார் ...

Read More »

கெனியன் நீர்தேகத்தில் காழிடறி விழுந்து உயிரிழந்த மாணவனின் சடலம் மீட்பு (Photos)

01

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனின் சடலம் கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு இன்று காலை 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த மாணவன் சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் (வயது – ...

Read More »

கெனியன் நீர்தேகத்தில் காழிடறி விழுந்து உயிரிழந்த மாணவனை மீட்க சுழியோடிகள் வருகை

Canyon power station

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனை மீட்க கொழும்பிலிருந்து சுழியோடிகள் இன்று வருகை தரவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக பகுதியில் ...

Read More »

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஜெனீவா மாநாட்டில்‌ பங்கேற்பு

IMG_3569

ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளிள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ் இன்று (17) சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நோக்கி பயணமானார். மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னர் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த அவர், ...

Read More »

ரிதிதென்ன – ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம்

Road (7)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ஜெயந்தியாய மற்றும் ரிதிதென்ன ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வகையில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கோறலைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ...

Read More »

“அறிவுபூர்வமான முதலீடு – வளமான எதிர்காலம்” – மட்டக்களப்பில் கருத்தரங்கு

investment-1

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “அறிவுபூர்வமான முதலீடு – வளமான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளிலான பங்குச்சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலைமைகள் தொடர்பாக முதலீட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ் மொழி மூலம் நடத்தப்பட்வுள்ள இவ்விலவச விழிப்புணர்வூட்டும் ...

Read More »

விவசாயி சடலமாக மீட்பு (Photos)

Phot (2)

ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலமொன்றினை இன்று காலை 10 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தாம் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் ...

Read More »

பாணந்துறையில் புவாத் ஜெம்ஸ் கட்டட திறப்பு விழா

Jeelaan College

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்காக கொடைவள்ளல் எம். ஜே. ஏ. புவாத் கட்டிக் கொடுத்த மூன்று மாடிக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 8.30 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது எம். ஜே.எம். புவாத் தம்பதியினர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் இத்திறப்பு விழாவில் பிரதம பேச்சாளராக ஷம் ஷம் பௌண்டேஷன் அதிபர் அஷ்ஷெய்க் முப்தி ...

Read More »

ஜாமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி ஆரம்ப கற்கைநெறி

Image1633

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம் அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி அரபு மொழியில் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு ஆற்றல்களையும் விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ...

Read More »