பிராந்திய செய்திகள்

33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் வடக்கு ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

007

வவுனியா அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் இந்திய அரசின் 33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் இன்று (19) முற்பகல் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டார்.(அ)

Read More »

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு

Screen Shot 2019-06-18 at 4.54.42 PM

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு விஜயம் மேற்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதுவரை காலமும் ...

Read More »

கல்முனை மாநகரில் இன ஐக்கியத்துக்கான பொசன் விழா

IMG-20190617-WA0023

கல்முனை மாநகர சபையின் ஒருங்கிணைப்பில் கல்முனை வர்த்தகர் சங்கம் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம் , மற்றும் கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பொசன் விழா கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய சதுக்கத்தில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றது இந்நிகழ்வில் கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ...

Read More »

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி உண்ணாவிரதம்

IMG_3237

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம் ...

Read More »

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்

Screen Shot 2019-06-17 at 10.09.12 AM

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் (19) புதன்கிழமை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Read More »

தலவாக்கலை வாகன விபத்தில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

DSC07647

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள், தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் வீதியை கடக்க ...

Read More »

அக்குறணையின் குப்பைகள் தம்புள்ளைக்கு – ஒப்பந்தம் கைச்சாத்து

IMG_20190613_122536

அக்குறணை பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் திண்ம கழிவுப் பொருட்களை தம்புள்ள மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் திண்ம கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு வழங்குவது தொடர்பில் தம்புள்ள மாநகர சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஐ.எம்.இஸ்திஹார் தெரிவித்தார். அக்குறணை பிரதேச சபையின் மாதாந்த பொதுச் சபை கூட்டம் நேற்று (13) அளவதுகொடை நகரில் ...

Read More »

மாவனல்லை Re-tree Srilanka அமைப்பினால் 2ஆயிரம் மரக்கன்றுகள் அன்பளிப்பு

Screen Shot 2019-06-13 at 12.33.57 PM

“துருலிய வெனுவென் அபி” எனும் தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் முன்னெடுத்துள்ள மர நடுகை வேலைத்திட்டத்துக்கு மாவனல்லை ரீ–டிரீ ஸ்ரீலங்கா (Re-tree Srilanka ) எனும் அமைப்பினால் 2ஆயிரம் மரக்கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. மாவனல்லை இளைஞர்களை உள்ளடக்கிய ரீடிரீ ஸ்ரீலங்கா அமைப்பினால் குறித்த மரக்கன்றுகள் கடந்த செவ்வாய்க்கிழமை; கேகாலை மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜகத் பல்லேகும்பரவிடம் கையளிக்கப்பட்டது. ...

Read More »

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

DSC07125

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் திடீரென இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்பழங்கள் கை மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்பட்டதை தொடர்ந்து இம்மாணவர்கள் ...

Read More »

பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை

13312447891244843768death-L

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத்தில் இன்று மதியம் 16 வயது மதிக்கத்தக்கப் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தில் வசிக்கும் ராமச்சந்திரன் ஆனந்தஜோதி வயது 16 என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் மரண விசாரணை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். ...

Read More »