உலகச் செய்திகள்

சிரியாவில் யுத்த நிறுத்த வலயம் அமைக்க ரஷ்யா- துருக்கி இணைந்து தீர்மானம்

image_18ab4e0917

சிரியாவில் நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்துவதற்கு துருக்கியும் ரஷ்யாவும் இணைந்து தலையிட்டு, சிவிலியன்களுக்கு யுத்த நிறுத்த வலயம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் 20 கிலோ மீட்டர் பிரதேசம் இந்த யுத்த நிறுத்தப் வலயமாக அடையாளப்படுத்தப்படவுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஷீப் தையிப் எர்துகான் மற்றும் ரஷ்ய ...

Read More »

புர்காவுடன் சென்ற பெண்ணுக்கு பொலிஸில் 121 பவுன் தண்டம்

burka

டென்மார்க் நாட்டில் சுற்றுலாப் பயணியாகச் சென்ற துருக்கி பெண் ஒருவர் வீசாவைப் புதுப்பித்துக் கொள்வதற்கு முஸ்லிம் பெண்கள் சிலர் அணியும் புர்கா ஆடையுடன் டென்மார்க் பொலிஸுக்குச் சென்றபோது பொலிஸாரினால் அப்பெண்ணுக்கு 121 பவுன் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. தமது நாட்டில் புர்கா ஆடை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாடை இன்றியே பொலிஸுக்கு வருகை தர வேண்டும் எனவும் ...

Read More »

மக்கா – மதீனா இடையே ரயில் சேவை, 24 ஆம் திகதி ஆரம்பம்- சவுதி அரசாங்கம்

train

புனித மக்கா மற்றும் மதீனா ஆகிய நகர்களை இணைக்கும் அதிவேக ரயில் சேவை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக சவுதி ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது. ஜேடா மற்றும் ரபீ ஆகிய நகர்கள் ஊடாக இந்த ரயில் பயணிக்கவுள்ளது. மதீனாவுக்கும் ரபீ ரயில்வே நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் பரீட்சார்த்த ...

Read More »

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குத் தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை

icc us threat

அமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களைக் கொடுமை செய்தது தொடர்பாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் யோசனை செய்துவருகின்றது. இந்த நீதிமன்றம் “சட்டவிரோதமானது” என்றும் “எங்கள் குடிமக்களை பாதுகாக்க எது வேண்டுமானாலும் செய்வோம்” எனஅமெரிக்க தேசிய ...

Read More »

சூடான் அமைச்சரவையை குறைக்க ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

125px-Flag_of_Sudan.svg

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்காக சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். இதற்காக வேண்டி அமைச்சரவையையும் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்களின் எண்ணிக்கை 31 இல் இருந்து 21 ஆக குறைக்கப்படும் என்று ஜனாதிபதி ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. “நாடு முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நிலைமையை சரிசெய்வதற்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர் ...

Read More »

சுவீடன் தேர்தலில் பிரதான இரு கட்சிகளுக்கும் சம அளவான வெற்றி

images

சுவீடன் நாட்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  இரு பிரதான கட்சிகளும் சம அளவான வாக்குகளை வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் சகல  வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் ஆளும் மைய இடதுசாரி கூட்டணி தனது எதிர் கட்சியான மைய வலதுசாரி கூட்டணியை விடவும் குறுகிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றபோதும் இரு தரப்பும் சுமார் 40 வீத ...

Read More »

தென் சூடானில் விமானம் விபத்து, 19 பேர் பலி

image_b50db9df9f

தென் சூடானின் தலைநகர்  ஜுபாவிலிருந்து யிரோல் நகர் நோக்கி பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது 22 பேர் அந்த விமானத்தில் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களுள் எத்தியோப்பியா மற்றும் உகண்டா இனத்தவர்களே அதிகம் என தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர். ...

Read More »

பிலிப்பீனின் மின்டாடோ தீவுக்கு அருகில் 6.4 ரிச்ட்டர் நிலநடுக்கம்

earthquake

பிலிப்பீனின் மின்டாடோ தீவுக்கு அருகில் 6.4 ரிச்ட்டர் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு  செயலகம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு பொருள் இழப்புக்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையெனவும் கூறப்படுகின்றது.   (மு)    

Read More »

அமெரிக்காவுக்கு எதிரான பராகுவேயின் தீர்மானத்துக்கு துருக்கி பாராட்டு

H.E. Recep Tayyip Erdogan-President of Rep oF Turkey-Story-Courtesy-Strathclyde-Telegraph

அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ஜெரூசலம் நகருக்கு மாற்றிய பராகுவே குடியரசின் தூதுவர் காரியாலயத்தை மீண்டும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு மாற்றுவதற்கு முன்னெடுத்த நடவடிக்கையை துருக்கி பாராட்டியுள்ளது. தென் அமெரிக்க நாடான பராகுவேயிற்கு தனது ஆதரவை எந்தவிதக் குறைவும் இன்றி வழங்கவுள்ளதாகவும் துருக்கு அறிவித்துள்ளது.  அத்துடன், பராகுவே குடியரசில் தனது தூதரகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ...

Read More »

சவுதியிலிருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றம்

saudi arabia

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர்  வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் தேச எல்லைச் சட்டத்தை மீறி நாட்டிற்குள் நுழைந்தவர்கள், சேவை ஒப்பந்தக் காலத்தை நிறைவு செய்த ஊழியர்கள் ஆகியோர் காணப்படுவதாகவும் அவ்வறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சவுதி ...

Read More »