உலகச் செய்திகள்

ஈராக்கிலுள்ள குவைட் பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு

kuwait

ஈராக்குக்கு வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு ஈராக்கிலுள்ள குவைட் தூதரகம் குவைட் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஸ்தீரமற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஈராக்கில் பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்து தங்கியிருக்கும் அனைவருக்கும் குவைட்டுக்கு செல்லுமாறும் குவைட் தூதரகம் மேலும் அறிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் ...

Read More »

சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர் அல் பஷீருக்கு 2 வருட சிறைத் தண்டனை அறிவிப்பு

download

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சூடான் முன்னாள் ஜனாதிபதி உமர் ஹஸன் அஹ்மது பஷீருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில், கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ஏழாவது ஜனாதிபதிப் பதவியை வகித்து வந்தவர்தான் உமர் அல் பஷீர் (வயது 72) ஆவார். இவர் ...

Read More »

இந்தியாவில் ஆர்ப்பாட்டம் அதிகரிப்பு, ஜப்பான் பிரதமரின் விஜயம் ரத்து

japan

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு மேற்கொள்ள இருந்த 3 நாள் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ...

Read More »

டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம், பதவி பறிபோகும் அபாயம்

donald-trump

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம்  நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணைக் குழு அனுமதி அளித்துள்ளது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் காங்கிரஸ் அவையை அவமதித்தல் போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு இரு அவைகளிலும் விவாதித்து டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற  நாடாளுமன்ற விசாரணைக் ...

Read More »

பிரிட்டன் பொதுத் தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அமோக வெற்றி

deee

பிரிட்டனில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 364 ஆசனங்களை பெற்றுள்ளதோடு, அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெரிமி கோர்பின் (Jeremy Corbyn) தொழிலாளர் கட்சி 203 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஸ்கொட்லாண்ட் தேசிய கட்சி 48 ஆசனைங்களையும் லிபரல் ஜனநாயக கட்சி ...

Read More »

இங்கிலாந்து தேர்தலின் பின்னர் கருத்துக் கணிப்பு முடிவு

deee

வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, போரிஸ் ஜொன்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று (13) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து பிரிட்டிஷில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் ...

Read More »

இந்தியவின் செயற்கைக் கோள் இன்று மாலை விண்ணுக்கு

rocket

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் ஒன்றை இன்று (11) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூமியை கண்காணிக்கும் இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ரொக்கெட் ...

Read More »

டெல்லியில் தீ விபத்து: 43 பேர் பலி, இந்திய ஜனாதிபதி, பிரதமர் கவலை தெரிவிப்பு

2

டெல்லியில் தொழிற்சாலைகள் பல இயங்கி வரும் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியில் ராணி ஜான்சி வீதியிலுள்ள அனஜ் மண்ட் என்ற 4 மாடி கட்டிடமே இவ்வாறு தீயில் சாம்பலாகியுள்ளது.நேற்று அதிகாலை 5 மணியளவில் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ...

Read More »

வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு டிசம்பர் 10 இல்

wld01

வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு இம்மாதம் (10) இல் சவூதிஅரேபியாவின் தலைநகர் ரியாதில் நடைபெறவுள்ளது. பிராந்திய அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு,சமூக விடயங்கள் குறித்து இம்மாநட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், குவைத், ஓமான் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு வளைகுடா பிராந்தியத்தில் மிகப் பலம் பொருந்திய அமைப்பாகக் ...

Read More »

ஈரானின் அறிவிப்பு: இஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு

images

ஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப்பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே இவர்களது சந்திப்பு நேற்று முன்தினம் ...

Read More »