கருத்துக்கள்

பயங்கரவாத தாக்குதலுக்கு முஸ்லிம் எம்.பி.க்கள் பொறுப்புக் கூற வேண்டும்- விஜேதாச ராஜபக்ஸ

wijedasa rajapaksa

நாட்டில் தவ்பீக் ஜமாத்தின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சென்று பயிற்சி எடுத்துவிட்டு வந்ததாக அன்று பாராளுமன்றத்தில் நான் கூறிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்களும், அமைச்சர்களும் தனக்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ...

Read More »

இந்த பயங்கரவாதத்தை முறியடிக்க அரசாங்கத்துக்கு முடியும், நடவடிக்கை ஆரம்பம்- பிரதமர் உறுதி

Ranil wickramasinghe1

நாம் எதிர்க் கொண்டிருக்கும் இந்த பயங்கரவாதம், நாட்டில் ஏற்கனவே கடந்த 30 வருட காலமாக முகம்கொடுத்த பயங்கரவாதத்தை விடவும் வித்தியாசமானது எனவும், இந்த சவாலுக்கு முகம்கொடுக்க அரசாங்கத்துக்கு சக்தியும் பலமும் இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த சவாலை முகம்கொடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த சம்பவத்துடன் சிறு குழுவொன்றுதான் தொடர்புபட்டுள்ளது. சர்வதேச ...

Read More »

புலனாய்வுப் பிரிவினருக்கு விரல் நீட்டுவது தவறு- மஹிந்த ராஜபக்ஸ

1519445414-mahinda_L

குண்டுத் தாக்குதல்களுக்கு புலனாய்வுப் பிரிவினரை குற்றம் சாட்டுவது எவ்வாறு? எனவும், புலனாய்வுப் பிரிவினரில் அரைவாசிக்கும் அதிகமானோர் இருப்பது சிறையிலேயே எனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக எதிர்க் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ...

Read More »

இராணுவத்துக்கு செயற்பட அவசரகாலச் சட்டம் தேவை- இராணுவத் தளபதி

Mahesh Senanayake

இராணுவத்தினருக்கு தற்பொழுது நாட்டில் உள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவசரகாலச் சட்டத்தை சில நாட்களுக்காவது அமுல்படுத்த வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு சர்வதேச தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.  இந்த வெடிப்புச் சம்பவத்தை ...

Read More »

அடிப்படைவாத அமைப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும்- ருவன் விஜேவர்தன

Ruwan-wijeyawardena-575-01(2)

நாட்டிற்குள் காணப்படும் சகல அடிப்படைவாத அமைப்புக்களையும் அடுத்துவரும் நாட்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இன்று (21)  பல பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த சகலரினதும் இறுதிக் ...

Read More »

இவ்வளவும் நடைபெறும் வரை புலனாய்வுத் துறையினர் என்ன செய்தனர்- முஜிபுர் ரஹ்மான் கேள்வி

Mujib

நாட்டில் இவ்வளவு பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் வரையில் புலனாய்வுத் துறையினர் எங்கிருந்தனர் ? என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் சாதாரணமான ஒன்று அல்ல. ...

Read More »

ஐ.தே.க.யின் ரவி – சஜித் முரண்பாடு குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து

1554548999-mahinda_l

அரசாங்கத்தைக் கொண்டு நடாத்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அடுத்த தலைமைத்துவத்தை யார் எடுப்பது என்பதில் தான் போட்டி நிலை காணப்படுவதாகவும், நாட்டு மக்களின் தேவைகள் குறித்து எந்தவித கரிசனையும் காணப்படாதிருப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குற்றம்சாட்டினார். நுவரெலியாவிலுள்ள தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ரவி-சஜித் கருத்து முரண்பாடு குறித்து ...

Read More »

ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஏற்கத் தயார்- கரு ஜயசூரிய

karu jayasuriya

தான் கட்சியில் எந்தப் பொறுப்புக்காகவும் கருத்து மோதிக் கொண்டவன் அல்லன் எனவும், ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தனக்குத் தந்தால் மக்களின் வேண்டுகோளின் படி அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நேற்று (20) மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் ...

Read More »

51 வீதத்துக்கும் அதிக மக்கள் ஆதரவைப் பெறும் வேட்பாளர் எம்மிடம் உண்டு- மஹிந்த

mawe

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 51 வீதத்துக்கும் மேலதிக வாக்குகளைப் பெறக் கூடிய தகுதியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தமது கூட்டணியில் இருப்பதாகவும், அவரை தகுந்த நேரத்தில் வெளிப்படுத்துவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார். ...

Read More »

சிங்கள இனத்தின் வீரர் ஒருவரை போட்டு ஜனாதிபதித் தேர்தலை வெற்றிபெற முடியாது- விக்ரமபாகு

wikramaba

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குப் பலம் இன்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வெற்றிபெற முடியாது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். எதிர்க் கட்சிக் குழுக்களினால் ஜனாதிபதித் தேர்தலை ...

Read More »