கருத்துக்கள்

அரபு மொழியில் பெயர்ப் பலகை இருந்தால் உடன் அகற்றுங்கள்- அமைச்சர் வஜிர

wajira

தனியார் அல்லது அரச நிறுவனங்களில் அரபு மொழியில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்கிவிடுமாறு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றுநிருபம் சகல அரச அதிகாரிகள் மற்றும் மாகாண சபை தலைவர்கள் ஆகியோருக்கு வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் ...

Read More »

ஞானசார தேரரின் விடுதலை தவறான முன்மாதிரி- TNA

tna2

அரசியலமைப்பில் அரச தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அலட்சியம் செய்த ...

Read More »

எனது அடுத்த கட்ட நடவடிக்கை- ஞானசார தேரர் கருத்து

yana thero

நாடு எதிர் கொண்டுள்ள அடிப்படைவாத நடவடிக்கைகளைத் தோற்கடிக்க எதிர்காலத்தில் அவசரப்படாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து செயற்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானதன் பின்னர் இன்று மாலைருக்மல்கம விகாரைக்குச் சென்று வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் ...

Read More »

நட்புறவுப் பாடசாலைகளை உருவாக்கிக் கொள்ள 2 வருட கால அவகாசம்- பிரதமர்

Ranil

நாட்டின் கல்வி முறைமைக்கு சிங்கப்பூரின் கல்வி முறைமை மிகவும் சிறந்த முன்மாதிரியாகும் எனவும், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கல்வி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று விரைவில் சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். மதங்கள் மற்றும் மொழிகளின் அடிப்படையில் பாடசாலைகளை பிளவுப்படுத்தாது பொதுவான கல்வி முறைமையை ...

Read More »

ஜனாதிபதி, பிரதமர் மீதான குற்றத்தை அமைச்சரின் மீது கழுவ முயற்சிக்கின்றர்- ஜே.வி.பி.

1527228905-jvp-submitted

அரசாங்கத்துக்கு எதிராக நாம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பிரதமருக்கு வாக்காலத்து வாங்குவதாக கூறுகின்றவர்கள், ரணில் விக்ரமசிங்கவினதும், மைத்திரிபால சிறிசேனவினதும் பின்னால் நாக்கை நீட்டிக் கொண்டு செல்பவர்களே என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்ட அறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் ...

Read More »

ஜனாதிபதியோ, பிரதமரோ சொன்னால் இராஜினாமா செய்வேன்- அமைச்சர் ரிஷாட்

rishad bathiudeen

ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கூறுவதாயின், தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். கூட்டு எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக தனக்கு எதிராக முன்வைக்கும் ...

Read More »

இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பில் அவசரப்பட தேவையில்லை- ஸ்ரீ ல.சு.க.

slfp-logo

இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் குழு நாட்டை முதன்மைப்படுத்தி சிறந்த ஒரு தீர்மானத்தை எடுக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும், கூட்டு எதிரணியினால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ...

Read More »

ஷரீஆ பல்கலைக்கழகம் குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து

mahindaa_l

மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும்,  அரசாங்கம் இது குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் வெசாக் தின வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,  ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ...

Read More »

நான் தான் ஜனாதிபதி வேட்பாளர்- கோட்டாபய ராஜபக்ஸ

Gota

தான் நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அல்ஜெஸீரா செய்திச் சேவைக்கு  வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எடுத்த தீர்மானம் இன்று, நேற்று எடுத்த ஒன்று அல்லவெனவும், அது எனது நீண்டகாலத் தீர்மானமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் அவ்வாறு ...

Read More »

பௌத்த மக்கள் அச்சமின்றி வெசாக் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்- மஹிந்த

image_9b23ad9baa

அச்சமில்லாமல் பௌத்த மக்கள் வெசாக் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், பாதுகாப்புப் பிரிவும், அரசாங்கமும் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கரிசணை காட்ட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று (18) தங்கல்லை கால்டன் வீட்டில் நடைபெற்ற தர்ம போதனை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் ...

Read More »