அரசியல்

அமைச்சர்களின் மாற்றம் மக்களுக்காக அல்ல, அரசாங்கத்தை இழுத்துச் செல்ல- JVP

anurakumara

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி அதனூடாக 2020 வரை அரசாங்கத்தை இழுத்துச் செல்வதற்கான ஒரு நடவடிக்கையே இந்த அமைச்சர்கள் மாற்றத்துக்கான பிரதான நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ...

Read More »

மஹிந்தவும், கோட்டாபயவும் மிகவும் நன்றிக்குரியவர்கள் – அமைச்சர் விஜேதாச

Wijedasaaa

கடந்த 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டியவர்கள் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரவித்துள்ளார். 30 வருட யுத்தத்தை நிறைவு செய்த அவர்கள் எந்தவகையிலும் மறக்க முடியாதவர்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மஹரகம இசிபதனாராம விகாரையில் இடம்பெற்ற ...

Read More »

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி இனவாத நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் – NFGG

NFGG logo

கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற முஸ்லிம்களுக்கெதிரான அச்சுறுத்தல்களும். இனவாத சம்பவங்களும் அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளன. மாத்திரமின்றி நாட்டின் சட்டம் ஒழுங்கை அச்சுறுத்தும் போக்காகவும் இது மாறியுள்ளது. இந்தக் குழப்பமான நிலமையை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. ...

Read More »

21 முஸ்லிம்கள் பாராளுமன்றத்தில் இருந்தும் பலமில்லை – ஹிஸ்புல்லா கவலை

hisbullah

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சுப் பதவிகளும் அனைத்து சலுகைகளும் உள்ளதாகவும், அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டார். கஹட்டோவிட்டாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையில் இடம்பெற்ற சியனே மீடியா வட்டத்தின் ஊடக செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார். முஸ்லிம் சமூகத்திலிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மஹிந்த ...

Read More »

மெழுகுவர்த்தி ஏற்றுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை- பொன்சேகா

sarath-fonseka-press

எல்.ரி.ரி.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது கூறாத உறவு முறையை, சிவாஜிலிங்கம் தற்பொழுது கூறுவதாகவும், எங்கோ உள்ள இறந்த ஒருவருக்கு யாரோ ஒருவர் மெழுகுவர்த்தி கொழுத்துவதனால், தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக இருக்க மாட்டாது என முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர் ...

Read More »

எனது வாழ்வில் தூக்கமில்லாத இரவு -மஹிந்த

Mahinda-Amaraveera

அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட தினம்தான், கடந்த 26 வருட என்னுடைய அரசியல் வாழ்வில் தூக்கமில்லாதிருந்த ஓர் இரவு என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர கூறியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுத்த சில நடவடிக்கைகளை தான் அனுமதிக்க வில்லையெனவும், கூட்டுப் பொறுப்புக்காக அவற்றுக்கு உடன்பட நேர்ந்ததாகவும் அவர் ...

Read More »

அரசியல் வெற்றியை தீர்மானிப்பது தலைகளின் எண்ணிக்கை அல்ல- மைத்திரி

Maithripala Sirisena

அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை வைத்து  தேர்தல் பெறுபேறுகள் தொடர்பான தீர்மானத்துக்கு வரமுடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரலகங்வில விலயாய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மஹவலி காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். கடந்த மே தினக் கூட்டத்துக்கு வந்த நபர்களுடைய தலைகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு ...

Read More »

ஞானசாரவை அடக்க முஸ்லிம் சமூகம் ஒன்று பட வேண்டும்

abdul saththar

பல வருடங்களாக ஞானசாரவை அடக்க முடியாத ஒரு சமூகமாக இலங்கையின் முஸ்லிம் இருந்து வருவது ஒரு கோழைத்தனமான வெட்கக்கேடான விடயமாகும். இந்த விடயத்தில் நாம் ஒருவரையொருவர் விமர்ச்சித்துக்கொண்டிருப்பதை. தவிர்த்து இதற்கான நேரடி நகர்த்தல்களை நாம் மேற்கொள்ளா விட்டால் நாம் ஒரு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் ...

Read More »

மஹிந்தவா? மைத்திரியா? தீர்மானம் எடுங்கள்- துமிந்த அவசர வேண்டுகோள்

mahinda-maithree

தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினரா? என பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் நிலையான தீர்மானத்தை எடுக்கும் காலம் நெருங்கியுள்ளதாக ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில அமைச்சர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ...

Read More »

நான் இருக்கும் வரையில் விடமாட்டேன்- ஜனாதிபதி உறுதி

maithree

தான் இந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரையில், பௌத்த மத்துக்குரிய முதலிடத்தை நீக்குவதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சகோதர சிங்கள வாராந்த பத்திரிகையொன்றுக்கு ஜனாதிபதி அளித்துள்ள விசேட செய்தியில் இதனைக் கூறியுள்ளார். பௌத்த மதத்துக்கு இந்நாட்டிலுள்ள முதலிடம் பறிபோயுள்ளது எனும் தலைப்பில் கடந்த சகோதர சிங்கள வார சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்த ...

Read More »