அரசியல்

ஒரே தினத்தில் கூட்டணி ஒப்பந்தம், வேட்பாளர் பெயரும்- பிரதமர் அறிவிப்பு

ranil-wikramasinghe_l

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகள் உள்ளடக்கிய பலமான, அதிகாரம் உள்ள அரசியல் கூட்டணியொன்றை அமைத்து நாட்டில் அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (24) அக்கும்புர வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர், பஸ் தரிப்பு நிலையமொன்றையும் திறந்து வைத்து பொது மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். ...

Read More »

அவசரகாலச் சட்ட நீக்கம் தொடர்பில் தெளிவில்லாமல் கருத்துக்கள்- பொலிஸ் விளக்கம்

Ruwan Gunasekara

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் மற்றும் தீவிரவாதிகளின் சொத்து முடக்கம் என்பவற்றுக்கு அவசரகாலச் சட்ட நீக்கம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், சிலர் சட்டம் குறித்த தெளிவில்லாமல் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ...

Read More »

எனக்கு ஜனாதிபதியாக போட்டியிட இன்னும் வாய்ப்பு இருக்கின்றது -குமார வெல்கம

welgama-01

எனக்கும் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு ராசி இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 90 வீதமானோர் என்னுடனேயே இருக்கின்றனர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதுவரையில் எந்தவொரு கட்சிக்கோ, வேட்பாளருக்கோ ஆதரவு வழங்குவதாக அறிவிக்கவில்லை. எனது நேரமும், ராசிபலனும் நல்லதாக இருந்து, ...

Read More »

திருட்டு வழியில் சஜித்தை ஜனாதிபதியாக்க மாட்டோம்- அஜித்

Karu-Ranil-Sajith

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமான முறையில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மாற்ற மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். நேற்று (23) மாலை மாத்தறையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். பொதுமக்களின் பலத்தினுாடாக சரியான முறையான ...

Read More »

மகப்பேற்று, பெண்நோயியல் மருத்துவ நிபுணர் சங்கத்தின் மௌனத்தால் நாட்டிற்கும், சமூகத்திற்கும் அபகீர்த்தி

Rauff Hakeem

அண்மைய சம்பவமொன்றில் மகப்பேற்று, பெண்நோயியல் மருத்துவ நிபுணர் சங்கம் மௌனம் சாதித்தது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பெரிதும் வாய்ப்பாக அமைந்து விட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், நேற்று கொழும்பில் நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்குபற்றிய பிரதான ...

Read More »

வாக்குச் சீட்டில் மாற்றம் வேண்டும்- விக்டர் ஐவனின் புதிய யோசனை

victor ivan

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் விரும்பாத ஒருவருக்கு தமது வாக்கைத் தெரிவிப்பதற்கு வாக்குச் சீட்டில் ஒரு இடம் வழங்கப்பட வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ராவய சிங்கள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார். அரச தொலைக்காட்சியில் நேற்றிரவு இடம்பெற்ற “சீதல ஈதல” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் ...

Read More »

ரணிலுக்காக கரு ஜயசூரிய தனது பதவியை இழப்பார் – லக்ஸ்மன் யாபா ஹேஸ்யம்

Lakshman Yapa Abewardan

ரணில் விக்ரமசிங்கவுடன் டாம் இழுக்கவும் முடியாது, சதுரங்க விளையாட்டில் ஈடுபடவும் முடியாது, வேறு விளையாட்டுக்கள் விளையாடவும் முடியாது என மஹிந்த ஆதரவு குழு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டவுடன்  சபாநாயகர் பதவியிலிருந்து கருஜயசூரிய இராஜினாமா செய்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் எனவும் யாபா குறிப்பிட்டார். ...

Read More »

இருவரும் பேசி வாக்கெடுப்பு இன்றி தீர்மானத்துக்கு வருவது சிறந்தது- நவீன்

naveen

அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து பேசி வாக்கெடுப்பொன்று இன்றி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வருமாக இருந்தால் அதுவே வரவேற்கத்தக்கதாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் ...

Read More »

எமக்கு ஜனாதிபதி வேட்பாளர் அல்ல பிரச்சினை, அவரது கொள்கை – பாட்டாளி

Minister_Patali_Champika_Ranawaka1

சஜித் பிரேமதாசவா?  அல்லது வேறு யாருமா? என்பது எமக்குப் பிரச்சினையல்ல எனவும் ஆதரவு வழங்குவதற்கு வேட்பாளராக வருபவரது வேலைத்திட்டமும், கொள்கையுமே எமக்கு அவசியம் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (19) ஆரம்பமாகிய புகைப்படக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் ...

Read More »

முஸ்லிம் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய கோட்டாபயவுக்கு வாக்களியுங்கள்- கருணா

Karuna

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் சட்டமும், கொள்கையும் மாத்திரமே உள்ளதாகவும், இதனை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று (19) மட்டக்களப்பில் அத்துரலிய ரத்ன தேரரினால் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். கோட்டாபய ...

Read More »