அரசியல்

தலதா பெரஹராவில் சஹ்ரான் ஒருவன் பாய்ந்திருந்தால், யாராலும் தடுக்க முடியாமல் போகும்- விமல்

1566223226-wimal-2

கண்டி தலதா பெரஹரா முடியும் வரையில் தான் பெரும் அச்சத்துடன் இருந்ததாகவும், அதன் மீது சஹ்ரான் ஒருவர் பாய்ந்திருந்தால், காதினலினாலும், மகாநாயக்கர்களினாலும் மக்களைத் தடுத்திருக்க முடியாமல் போயிருக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார். ஹொக்கந்தர பகுதியில் இடம்பெற்ற  பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். இவ்வாறு நடைபெற்றிருந்தால், அமெரிக்காவின் நோக்கத்தை ...

Read More »

அவசர கோபக்காரர் நாட்டுத் தலைமைக்கு பொருத்தமற்றவர்- வெல்கம

kumara welgama

எமது நாட்டுக்கு அவசர கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் ஒருவரே வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தெரிவு சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார். களுத்துறை, பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

Read More »

சஜித் பிரேமதாச நல்லவர்- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நற்சான்றிதழ்

wpid-Maithripala-Sirisena-13-July-15-Prz-media-.jpg

சஜித் பிரேமதாச என்பவர் அரசியலில் ஒரு திருடரோ, ஊழல் வாதியோ அல்லவெனவும், இந்த நற்சான்றிதழை தான் அவருக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதியும் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று (18) வீடமைப்புத் திட்டமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். எதிர்வரும் ஜனாதிபதி ...

Read More »

உண்மையான தமிழன் கோட்டாபயவுக்கு வாக்களிக்க மாட்டான்- சீ.வி. விளக்கம்

C.V.-720x450

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப ராஜபக்ஸவுக்கு உண்மையான தமிழராக இருந்தால், வாக்களிக்க மாட்டார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இன்னும் அவருக்கு எதிராக இரண்டு மூன்று ...

Read More »

நாளை மீண்டும் புரட்சி ஆரம்பம் -அத்துரலிய தேரர் அறிவிப்பு

athuraliye rathana thero

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (19) மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டமொன்றை நடாத்தப் போவதாக அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார். நாளை பிற்பல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டம்,  இந்நாட்டிலுள்ள ஹிந்து, பௌத்த மக்கள் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக ...

Read More »

ஐ.தே.க.யின் மூன்று சக்திகள் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க கருத்து

thissa

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ரணில், சஜித், கரு ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். ...

Read More »

ஜனாதிபதித் தேர்தலை நடாத்த விடவேண்டாம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் TNA கோரிக்கை

sambanthan

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த விடாது தடுத்து, புதிய அரசியல் யாப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் நூற்றுக்குத் 90 வீதம் ...

Read More »

சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமையையாவது எமக்கும் தாருங்கள்- எல்லே குணவங்ச

elle gunawansa

இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளையாவது பெரும்பான்மை சிங்களவர்களுக்கு வழங்குங்கள் என்று தான் கோரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எமது தாயகம் எனக் கூறுகின்றனர். அவர்கள் முழு நாட்டையும் ...

Read More »

முன்னாள் இராணுவ அதிகாரி தேசிய பாதுகாப்பை தரம் குறைத்துப் பேசுவது தவறு- ஜனாதிபதி

maithripala sirisena president of sri lanka

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படும் வகையிலான பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு தான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். நேற்று (16) இலங்கை இராணுவத்தினருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்து தரக் குறைவாக பேசும் போது நாட்டு ...

Read More »

நாட்டைக் கட்டியெழுப்பும் நடைமுறைச் சாத்தியமான திட்டம் தன்னிடம்- கோட்டாபய

gota

நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலந்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆற்றிய உரையில் கூறியது போன்றே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் ...

Read More »