சமூகம்

மங்கள சமரவீரவின் ஜெனீவா உரை

managala samaraweera

இலங்கையின் எதிர்காலம் நாட்டிலுள்ள சகல மக்களின் உரிமைகள், நீதி மற்றும் சகல பிரஜைகளின் கண்ணியத்தன்மை என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பைத் தயாரிக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும், இதற்கான பணிகள் தற்பொழுது  முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா உரையின்போது தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மங்கள சமரவீர நேற்றையதினம் ...

Read More »

ஜனாதிபதியவர்களே தாமதிக்காமல் தீர்மானம் எடுங்கள்- ரத்ன தேரர் வேண்டுகோள்

rathna himi

நாட்டின் தேசிய கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகள் நடக்குமாயின் அதற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானங்களை எடுக்க தாமதிக்கக் கூடாது என நாம் இந்த மகா சபையில் வைத்து ஜனாதிபதிக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவ்வாறு தாமதிப்பதனால் நாடு பாதாலத்துக்கு இட்டுச் செல்லப்படுகின்றது என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற தேசிய மகா சபையின் ...

Read More »

பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் – UNFPA

Photo 3

இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள் மாத்திரமே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தேசிய முன்னுரிமையின் அடிப்படியில், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள, பெண்கள் மற்றும் சிறுவர்கள் ...

Read More »

முஸ்லிம் ஊடகங்களை வளர்ப்பது சமூகத்தின் இருப்புக்கான அடையாளமாகும் – அஷ்ஷெய்க் நௌபர்

Untitled-1

முஸ்லிம் ஊடகங்களையும், முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் வளர்ப்பது சமூகத்தின் இருப்புக்கான அடையாளமாகும். முஸ்லிம் ஊடகத்துக்கும், ஊடகவியலாளர்களுக்கும் உதவுவது எனது பார்வையில் ‘ஸதகதுல் ஜாரியா’ எனும், நன்மை கிடைக்கும் ஒரு வணக்கமாகும் என கல்விக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.நௌபர்(கபூரி) தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என். எம். அமீன் தலைமையில் ...

Read More »

27 ஆம் திகதி வரை அவகாசம், நாம் இராணுவம் என்பதை மறவாதீர்கள்- மஹிந்த

download (1)

நாட்டில் யுத்தம் நடாத்திய அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களே தமது உரிமைகளுக்காக இன்று உண்ணாவிரதம் இருப்பதாகவும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் உரிய தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் வரவில்லையாயின் காத்திரமான தீர்மானமொன்றுக்கு வரவுள்ளோம் எனவும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர் மஹிந்த எதிரிசூரிய தெரிவித்தார். ஊடகங்களிடம் இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தாம் எதிர்வரும் 27 ஆம் ...

Read More »

ஏய் கழுதைகளே ! ஞானசார தேரர் இன்று பகிரங்கமாக சீற்றம்

download

ஏய் கழுதைகளே ! என கோபம் கொண்டு பாதையில் சென்ற வாகனமொன்றின் சாரதிக்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் மிருகங்களின் பெயரைச் சொல்லி கெட்ட வார்த்தையில் ஏசிய சம்பவமொன்று இன்று கொழும்பில் ஊடகங்களின் முன்னிலையில் இடம்பெற்றது. புறக்கோட்டையில் இன்று இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அங்கவீனமுற்ற ...

Read More »

பொலிஸார் அடிமைப்பட்டு செயற்பட்ட காலம் மலையேறிவிட்டது

Pujith J

அறிமுகம், பணம், அதிகாரம் அல்லது அரசியல் என்பவற்றுக்காக பொலிஸார் செயற்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இமதுவவில் இன்று (10) புதிய பொலிஸ் நிலையமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். லஞ்சம் பெற்றுக் கொள்ளல் மற்றும் பல்வேறு தவறுகளை செய்து வரும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோருக்கு ...

Read More »

நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த எச்.எம். பாயிஸ்

H.M. Faiz Sri Lanka Muslim Media Forum

இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. பத்திரிகையாளராக, பத்திரிகை செயற்பாட்டாளராக, ஊடகப்பயிற்றுவிப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை கண்காணிப்பாளராக பணி புரிந்த பன்மைமிகு ஆளுமை மிகு ஒருவராக சகோதரர் பாயிஸை நான் பார்க்கின்றேன். 1989 முதல் 1998 வெளியான (Islamic Perspective) இஸ்லாமிக் பேர்ஸ்பெக்டிவ் என்ற ஆங்கில தமிழ் மொழிப்பத்திரிகையின் ...

Read More »

தேர்தல் தாமதமாக யார் பொறுப்பு – மஹிந்த தேசப்பிரிய விளக்கம்

mahind election

தேர்தலை நடாத்த வில்லையென எமக்கு விரல் நீட்ட வேண்டாம் எனவும் அதற்குரிய பொறுப்பை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சே ஏற்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் நடாத்த வேண்டும் என்ற கருத்தில் எமக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. பந்து எம்மிடம் இல்லை. எம்மிடம் பந்தில்லாத போது நாம் ...

Read More »

5 வருட அரசாங்கம் 99 வருட ஒப்பந்தத்தை எவ்வாறு செய்வது- Pro. நிர்மால் ரஞ்சித்

Nirmal Ranjith

ஐந்து வருடங்களுக்கு ஆட்சியமைக்க வந்த அரசாங்கம் ஒன்று 99 வருடங்களுக்கான தீர்மானங்களை எடுப்பது எவ்வாறு என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி கேள்வியெழுப்பியுள்ளார். அரசாங்கத்தின் தீர்மானங்களை செயற்படுத்தும் வழிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் தீர்மானமும் அவ்வாறு ஒரு சிலரின் எண்ணக்கருவுக்கு அமையவே எடுக்கப்பட்டது. எங்கேனும் ஒரு அறையினுள் எட்டப்படும் தீர்மானங்களை நாட்டிலுள்ள ...

Read More »