புகைப்பட செய்திகள்

இலங்கை தாக்குதல்களை பொறுப்பேற்பதாக IS தீவிரவாதிகள் அறிவிப்பு

160331162857_isis_fighters_syria_640x360_ap_nocredit

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவங்களை ஐ.ஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமாக் எனப்படும் செய்தி முகவர் சேவையொன்று இதனை வெளிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது. எனினும் மேலதிக விபரங்கள் எதுவும் குறித்த செய்தி சேவையில் வெளியிடப்படவில்லை. கிறிஸ்த்தவ தோவாலயங்கள் மற்றும் நட்சத்திர விருந்தகங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் ...

Read More »

குண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசம்

166154-alert

வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட, அலுமினியம் தகரங்களால் மூடப்பட்ட லொறியொன்றும், சிறியரக வான் ஒன்றும், கொழும்பு நகருக்குள் புகுந்துள்ளதாக, பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை அடுத்து, கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்புத் துறைமுகப் பொலிஸாரால், துறைமுக வாயிற் பகுதிகளில் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

Read More »

உயிரிழப்பு 310 ஆக அதிகரிப்பு

456e6de2-64a7-11e9-a2c3-042d2f2c8874_image_hires_193248

இலங்கையில் எட்டு இடங்களில் கடந்த 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இன்று காலை அவர் மேலும் குறிப்பிட்டார். சம்பவங்களில் இதுவரை வெளிநாட்டவர்கள் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 17 வெளிநாட்டவர்கள் காயமடைந்து ...

Read More »

மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி

Silence

இன்று காலை 8.30 முதல் 8.33 வரையான 3 நிமிடங்களுக்கு தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலியை கடைபிடிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை இன்றைய தினம் தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.(ஸ)

Read More »

மற்றுமொரு வெடிப்பு சம்பவம் – பாதிப்புக்கள் இல்லை

Capture

கொட்டஞ்சேனை கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் சற்று முன்னர் மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டு செயலிழப்பு செய்யும் அணியினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர், தேவாலயத்திற்கு அருகில் இருந்த வேன் ஒன்றை சோதனையிடும் போது, குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

Read More »

உயிரிழப்பு 290 ஆக அதிகரிப்பு

skynews-sri-lanka-explosions_4646798

நாட்டில் நேற்று காலை முதல் எட்டு இடங்களில் இடம்பெற்ற 9 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 500 பேரளவில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார். (ஸ)

Read More »

இதுவரை 24 பேர் கைது

sri-lanka-bombing

நேற்றைய தினம் கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

9 வெடிப்புச் சம்பவங்கள்: பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு

WhatsApp Image 2019-04-21 at 9.26.07 AM

நாட்டில் காலை முதல் இதுவரையில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பலியானவர்களில் 32 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இன்று காலை 8.45 முதல் எட்டு இடங்களில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்களில் சுமார் 450 இற்கும் ...

Read More »

9 வெடிப்புச் சம்பவங்கள்: 192 பேர் பலி, 500 இற்கும் மேற்பட்டோர் காயம்

WhatsApp Image 2019-04-21 at 10.12.50 AM

நாட்டில் காலை முதல் இதுவரையில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 192 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எட்டு இடங்களில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவங்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன. மூன்று தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள், தெஹிவளை மற்றும் தெமட்டகொட ஆகிய ...

Read More »

6 வெடிப்புச் சம்பவங்கள்: இதுவரையில் 141 பேர் பலி, இதில் 9 பேர் வெளிநாட்டவர்கள்

WhatsApp Image 2019-04-21 at 10.12.50 AM

கிறிஸ்தவ தேவாலயங்கள் மூன்று மற்றும் மூன்று ஹோட்டல்கள் என்பவற்றில் இடம்பெற்ற ஆறு வெடிப்புச் சம்பவங்களில் 141 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 9 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவங்களில் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளிலும் காயமடைந்த சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. ...

Read More »