கவிதை

சமாதானம்…!

images (2)

          அர்த்தம் புரியப்படாமல் அல்லோலகல்லோளப்படும் அனாதரவான வார்த்தைப் பிரயோகம் ….! -அன்பு மர்வா –  (23)

Read More »

சகவாழ்வு .. !

coexist

          பல்லின சமூகத்துக்குள் புரிந்து வாழும் உணர்வுகள் கூட்டப்பட்ட வாதங்கள் கழிக்கப்பட்ட இணக்கப்பாடுகளினால் பெருக்கப்பட்ட நம்பிக்கையீனங்கள் பிரிக்கப்பட்ட பெறுமானம் மிக்க ஒரு வாழ்வொழுங்கு …! -அன்பு மர்வா –  (22)

Read More »

மோதல் …!

download

          மமதை உள்ளத்தில் மேற்கொள்ளும் போராட்டம் ….!   தான் கொண்ட கருத்து உள்ளத்திலுள்ள விட்டுக் கொடுப்பின் இடத்தைப் பிடிப்பதால் ஏற்படும் வறுமை ….! -அன்பு மர்வா –  (21)

Read More »

எட்டாப் பழம்..!

images (4)

          சரியென்ரொன்றிருக்க எதையோ விளங்கி ஏதோ செய்து சரியானதை சாதிக்க வக்கில்லாமல் வாயில் கனியும் மனச்சாட்சிக் கெட்டாத வார்த்தைகள் …! – அன்பு மர்வா –  (20)

Read More »

செல்வம்…!

images (1)

          உண்டென மனதில் கொண்டால் எல்லா மனிதர்களையும் வள்ளலாக்கும் …..! -அன்பு மர்வா — (19)

Read More »

புரிந்துணர்வு….!

images

          உள்ளங்களில் கட்டியெழுப்பப்படும் எண்ணம் சொல் செயல் சார்ந்த நம்பிக்கை கற்கள் கொண்ட கட்டிடத்தின் தோற்றப்பாடு …! – அன்பு மர்வா — (18)

Read More »

சாத்தான்களின் தேசம்

21d50c3c-587f-45c3-800b-4aec27347290

சாத்தான்களின் தேசம் சாத்தானே! பேச முடியா மழைகள் நாங்கள் என்ன பாவம் செய்தோம்… உன் மீது வஞ்ஜகம் வைத்தோமா? அல்லது.. உன்னுடைய உறக்கத்தை கெடுத்தோமா? அல்லது .. உன் பிள்ளைகள் உண்ணும் உணவிலே கை வைத்தோமா? அல்லது .. உனது உள் உணர்விலே புகுந்து விளையாடினோமா? இல்லாவிட்டால் .. மதங்களைச் சொல்லி மனிதத்துவத்தைப் புதைத்தோமா?.. ஆமாம் ...

Read More »

அன்பு ….!

images (3)

          அரக்கனையும் ஆயுதமின்றி அடக்கும் அதிகாரமில்லாத ஆளுமை ….! — அன்பு மர்வா — (17)

Read More »

மரணம் …!

dead

          பிரபஞ்ச வாழ்வுக்கு விரும்பாமல் வைக்கும் முற்றுப் புள்ளி… ! — அன்பு மர்வா-(16)

Read More »

செருப்பு …..!

download

          அடுத்தவர் சுமையை தன் சுமையாய் ஏற்கும் பிரதியுபகாரம் கேளா அப்பாவி …..! — அன்பு மர்வா– (15)

Read More »