சிறப்புக் கட்டுரைகள்

இறுதி பஸ்ஸையும் தவறவிட்டால்…

4e64feb0c630182ccd22eafbee59cb3e_XL

நாட்டில் புதியதோர் அரசியலமைப்பொன்றிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முழுப் பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக்களைத் திரட்டும் ஆணைக்குழுவொன்று தாபிக்கப்பட்டு- பொது மக்கள், சிவில் சமூகத்தின் கருத்துகள் திரட்டப்பட்டு, தொடர் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இடைக்கால அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது. இடைக்கால அறிக்கை மீதான ஐந்து நாட்கள் விவாதத் தொடரொன்றும் பாராளுமன்றில் நடைபெற்றது. புதியதோர் அரிசியலமைப்பல்ல. திருத்தமும் ...

Read More »

கிந்தொட்ட இனவாத சம்பவம்: யார் காரணம் ? – ஒரு பார்வை

police

கடந்த அரசாங்க கால வடுக்கள் மனதை விட்டும் நீங்காத நிலையில் கிந்தொட்ட நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அளுத்கம சம்பவம் ஒரு ஆட்டோ சம்பவத்தின் அடியாக ஆரம்பித்தது போல, கிந்தொட்ட சம்பவம் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்திலிருந்து புகைந்து பற்றியது என்று சொன்னால் வரலாற்று நினைவுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். வீடுகள் உடைப்பு, கடைகள் தீவைப்பு, வாகனங்கள் மற்றும் ஏனைய ...

Read More »

அரசியல் தேவை அஷ்ரபை மரணிக்கச் செய்ததா? பஷீர் சேகுதாவூத்

Basheer segudawood

கேள்வி: மறைந்த அமைச்சர், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த சர்ச்சையை திடீரென தூக்கிப் பிடித்தமைக்கான காரணம் என்ன? பதில்: இது திடீரென எடுத்த விடயமல்ல. தலைவர் மறைந்து மூன்று மாதங்களிலே இவ்விடயம் குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பினேன். அது சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலம். தலைவரின் மறைவு குறித்து ஆராய அவர் ஜனாதிபதி ...

Read More »

இலங்கையில் 14 லட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை?

_98635443_gettyimages-479988940

அனுராதபுரம்கெ க்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய வந்திருந்தது. பாடசாலைக்கு செல்லும் முன்னர் மாணவர்கள் காலை உணவை எடுத்திருந்தார்களா? என்ற விடயத்தில் பொருளாதாரம், சமூகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் ...

Read More »

அபிவிருத்தி எனும் மாயை

ff

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் என்றனர். கொழும்பை தெற்காசியாவில் வேகமாக வளர்ச்சியடையும் நகரம் என்றனர். ஆட்சியை நல்லாட்சி என்றனர். உலகின் மூன்றாவது உறுதியான தகவல் அறியும் உரிமை என்றனர். ஆசிய பசுபிக் சிறந்த நிதி அமைச்சர் என்றனர். அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக் கேற்ப காலா காலமாக ஏதோவொன்று மூலம் மக்கள் திசை திருப்பப்படுகின்றனர். அபிவிருத்தியென்ற பிம்பத்தில் காட்டப்படும் ...

Read More »

சலூனில் பத்திரிகை வாசித்து, பத்திரிகை ஆசிரியரான என்.எம். அமீன் (Video)

NMAMEEN

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரிருமான என்.எம்.அமீன் அவர்களுடனான நேர்காணல். கேள்வி: முதலில் உங்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்குங்கள்? பதில்: நான் அரநாயக தலகஸ்பிடிய என்ற கிராமத்தில் பிறந்தவன். தலகஸ்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஹெம்மாத்தகம அல் அஸ்ஹர் கல்லூரியிலும் மாவனல்லைசாஹிரா கல்லூரியிலும் பயின்று களனி பல்கலைக்கழகத்தில் பட்டத்தை முடித்திருக்கிறேன். என்னுடைய முதலாவது ...

Read More »

கிழக்கின் முஸ்லிம் தலைமைத்துவத்தை இல்லாதொழிக்கவே முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்துள்ளனர் – நாமல் ராஜபக்ஷ

dgdg

புதிய தேர்தல் முறை மாற்றத்தால் முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழ்ந்துள்ளது. முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டும் முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதுவரை காலமும் கிழக்கில் இருந்த முஸ்லிம் தலைமைத்துவத்தை இல்லாதொழிக்கவே முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்தனர். இனியும் கிழக்குக்கு முஸ்லிம் முதலமைச்சரொருவர் வேண்டாமென்று முஸ்லிம் தலைவர்கள் புதிய தேர்தல் முறையை ஆதரித்து வாக்களித்துள்ளதாக பொது எதிரணி பாராளுமன்ற ...

Read More »

சவுதியின் இன்றைய நிலையும், வரலாற்றைப் புரியாத மனப் பதிவுகளும் !

unnamed

ஒன்றைப் பற்றி முதன் முதலில் எண்ணத்தில் தோன்றும் கருத்தே எண்ணக்கருவாகும். இதன் உருவாக்கம் சார்பு நிலை, எதிர் நிலை என்பதற்கேற்ப ஆளுக்காள் வித்தியாசப்படுகிறது. இவ்வாறு சார்பு நிலையிலும் எதிர்  நிலையிலும் ஒன்றுக்கொன்று முரணாக நோக்கப்படும் ஒரு சொற்பிரயோகம்தான் வஹாபிஸமாகும். இன்று தஃவாக்களத்தில் ஈடுபடுகின்றவர்கள் அனைவரும் அதன் உண்மைநிலையினை அறிந்திருப்பது அவசியமாகும். வஹாபிஸம் என்ற சொல் இமாம் ...

Read More »

இலங்கைக்கு பின்லாந்தின் கல்விப் பாரம்பரியம்

Flag-Pins-Sri-Lanka-Finland

‘மின் பஸ்ஸே கொய் மோடெயெக்டத் லங்காவே பேரன்ன பே. ஹெமோம யம்கிசி அத்யாபன பெத்தென் யொமுவென்னம வெனவா’ இனிமேல் இலங்கையில் எந்தவோர் மடையனும்கூட தப்ப முடியாது. அனைவரும் ஏதோவொரு கல்வித் துறையில் ஈடுபட்டேயாகவேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க Ranil Wickremesingheதலைமையிலான இராஜதந்திர தூதுக்குழு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை கடந்த திங்கள், செவ்வாய் தினங்களில் பின்லாந்து வந்திருந்தது. ...

Read More »

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் பேண வேண்டிய வழிகாட்டல்கள்

social media

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு! தேசிய சூரா சபையின் ஊடகத் துறைக்கான உப குழுவின் வேண்டுகோள்: அண்மைக்கால சமூக ஊடகங்களிலான (Social Media) பலரது பொறுப்பற்ற செயற்பாடுகள் ஒருவகையான பதற்ற நிலையை அதிகரிப்பதாக அமைந்துள்ளன. இதனை ஒழுங்குறக் கையாளாவிட்டால் நிலைமை தலைக்கு மேலே செல்லும் அபாயம் இருக்கிறது. இந்த விடயத்தில் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து ...

Read More »