சிறப்புச் செய்திகள்

ஸ்ரீ ல.சு.க.யின் மஹிந்த உட்பட பலர் பொதுஜன பெரமுனவில் இணைவு

slpp

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) முற்பகல் 11.00 மணிக்கு பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டுள்ளார். விஜேராமவில் உள்ள தனது வாசஸ்தலத்தில் வைத்து இந்த உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 ...

Read More »

ஜனாதிபதியின் திடீர் தீர்மானம் – ஜே.வி.பி.யின் கருத்து

vijitha he

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீடீர் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரான ஒன்று என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்  இதனைக் கூறினார். இந்த தீர்மானம் குறித்து இன்று தமது ...

Read More »

நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைப்பு- ஜனாதிபதி வர்த்தமானியில் கையொப்பம்

gasset

பாராளுமன்றம் இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி தற்பொழுது கையொப்பமிட்டுள்ளதாகவும், கையொப்பமிடப்பட்டுள்ள அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரச அச்சகக் கூட்டுத் தாபனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (மு/ஸ)    

Read More »

புதிய தேசியக் கட்சி ஒன்றை உருவாகும் முயற்சியில் சந்திரிகா ?

Chandrika-Bandaranaike

முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின் மத்தியில் சந்திரிகா இந்த முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசியல் விரக்தியிலிருந்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்சி உருவாக்கத்துக்காக முன்னணி விளையாட்டு வீரர்கள் சிலருக்கும் ...

Read More »

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை

maithripala sirisean

தன்னிடமுள்ள பல சக்திகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன் எனவும் தேவைப்படின் பயன்படுத்துவதற்கு இன்னும் பல சக்திகள் தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றிரவு (08) நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள அரசாங்கத்தின் ...

Read More »

மஹிந்தவுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டணியின் வாக்கு – இறுதித் தீர்மானம்

tna

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியினால் புதிய பிரதமர் ஒருவரை நியமித்தமை மற்றும் பிரதமராக இருந்தவரை நீக்கியமை என்பன அரசியலமைப்புக்குப் புறம்பானது எனவும் அது ஜனநாயகத்துக்கும் பாராளுமன்றத்தின் உயர் தன்மைக்கும் பாதிப்பானது எனவும் அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ...

Read More »

மீண்டும் ரணில் பிரதமரானால் மறுகனமே நான் பதவி விலகுவேன்- ஜனாதிபதி

01 (3)

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக்கினால் தான் ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு மணி நேரம் கூட இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (31) அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். தான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ...

Read More »

இலங்கை விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம் – வெளிநாட்டு உயர் அதிகாரிகளிடம் சபாநாயகர் வேண்டுகோள்

BS8A0867

சபாநாயகர் கரு ஜெயசூர்யவுக்கும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத அரசியல் மாற்றம் தொடர்பில் தமது கவலையடைவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலைமை காரணமாக நாட்டுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பிலும் உயர் ...

Read More »

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய நடவடிக்கை

Ravi-K

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இறக்குமதி தீர்வை வரி இல்லாமலா 200 வாகனங்கள் வெளியாக்கியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் 2016 ஒக்டோபர் 6 திகதி நிதி குற்றவியல் பிரிவு தமது விசாரணையை CRS/24/2016 ...

Read More »

பெரும்பான்மையை நிரூபிக்கும் பிரேரணை நாளை ஒப்படைப்பு- ஐ.தே.க.

UNP

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் பிரேரணையை நாளை (30) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 6 பேரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் சத்தியக் கடதாசி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  (மு)  

Read More »