சிறப்புச் செய்திகள்

சமய ஸ்தானங்களில் பிரசாரம் செய்வது பிரஜாவுரிமை பறிக்கப்படுவதற்கான குற்றம்- தே.ஆ.

mahinda desappiriya

சமய ஸ்தானங்களில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளின் போது மதகுருக்களினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக அமையும் விதத்தில் அறிவிப்புக்கள் விடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் கூறியுள்ளார். குறிப்பாக போயா தின பௌத்த மத உபதேசங்கள், வழிபாட்டு நிகழ்வுகள், கிறிஸ்தவர்களின் ஞாயிறு ஆராதனை, இந்துக்களின் கோவில் வழிபாடுகள் மற்றும் ...

Read More »

கோட்டாபயவின் நழுவல் குறித்து சஜித் பகிரங்க விளக்கம்

1569434475-sajith-1

பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது எனவும், ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடன்கஸ்லந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போருக்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை எனவும், இராணுவத் தளபதியே போரை ...

Read More »

வாக்காளர்கள் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுங்கள்- தே.ஆ.

election

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்களிடம் அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாவிடின், தற்காலிக அடையாள அட்டைகளை மாவட்ட  தேர்தல்கள் செயலகத்தினூடாக பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஒரு வாக்காளர், தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கபட்ட கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம், வயதானவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள ...

Read More »

விருப்பு வாக்கு வழங்குவது குறித்து வேட்பாளர் அனுரகுமார விளக்கம்

anura-kumara-dissanayake

தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களிக்கும் எவரும் தனது இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை பயன்படுத்த வேண்டாம் என தாம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவ்வாறு விருப்பு வாக்குகளை வழங்குவதற்கு தேர்தல்கள் சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் அதனைப் பயன்படுத்த அதிகாரம் உள்ளது. அவ்வாறு பயன்படுத்துவதனால் எந்தவிதப் பயனும் ...

Read More »

அனுரகுமார மகாசங்கத்தினரிடம் அளித்த வாக்குறுதி

JVP- com-04

தோல்வியுள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை மூடி மறைப்பதற்கான ஓர் ஆயுதமாக இன்று இனவாதமும், மதவாதமும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற மகாசங்கத்தினருடனான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். பெரும்பாலான அரசியல்வாதிகள் எமது தார்மீக உரிமைகளை தமது அரசியல் மேடைகளில் மேற்கொள்ளும் போராட்டமாக ...

Read More »

ஜனநாயகமான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழையுங்கள் -மஹிந்த வேண்டுகோள்

desappiriya

போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலமே ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஏனையவர்களுக்கு கவலையை ஏற்படுத்தாத வகையில் தேர்தல் இடம்பெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் ...

Read More »

இது இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த ஒரு தேர்தலாகும்- தே.ஆ. விளக்கம்

election commij

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி போட்டியிடாது போனால், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியவர்களில் எவரும் போட்டியிடாது இலங்கை வரலாற்றில் நடைபெறும் முதல் ஜனாதிபதித் தேர்தலாக இது அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் கட்டுப்பணம் ...

Read More »

எமக்காக சின்னத்தையாவது மாற்ற முடியாதவர்களுடன் என்ன கூட்டணி- ஜனாதிபதி

Maithiri

எமக்கு கோட்டாபயவுக்கு வாக்களிக்க முடியும் எனவும், குறித்த சின்னத்தை மாற்றாத வரையில் அந்த கட்சிக்கு வாக்களிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குருணாகலையில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ...

Read More »

பிரதமர் குறித்து அமைச்சர் ஹக்கீம் கருத்து

rauf hakeem

தனக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளதாகவும் அதில் எந்த உண்மையும் கிடையாது எனவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். எமக்கிடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும் எதிர்காலத்திலும் அவருடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்தவாரத்திற்குள் பிரதமர் ரணில் ...

Read More »

கட்சித் தலைமை மீது எனக்கு நம்பிக்கையுள்ளது- சஜித் பிரேமதாச

saji

கட்சி மீதும், தலைமைத்துவத்தின் மீதும் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. எமது கட்சியில் சர்வாதிகாரத்துக்கு இடம் கிடையாது. படுக்கையறைகளுக்குள்ளிருந்து கொண்டு வேட்பாளரை தெரிவு செய்யும் கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு தரப்பினதும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு ஆதரவு தேடும் எண்ணத்தில் செயற்படப் ...

Read More »