சிறப்புச் செய்திகள்

90 வீதம் முஸ்லிமல்லாத இந்நாட்டில் கொண்டு வந்தால், விளைவு மோசமாகும்- திலங்க எச்சரிக்கை

Thilanga Sumathipala

சமய விடயமொன்றுக்காக அரச தரநிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கு இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், 90 வீதம் முஸ்லிமல்லாதவர்கள் வாழும் இந்த நாட்டில் அவ்வாறு செய்வதனால், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திலுள்ள அரச ...

Read More »

வெற்றி பெற பௌத்த வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவர் வேட்பாளராக வேண்டும்- தயா கமகே

1549798533-Loans-should-be-taken-to-pay-off-loans-Daya-Gamage-B

ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என அக்கட்சியின் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதாயின் அந்தப் பொறுப்பை ஏற்று, சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றி பெறுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். அதற்காக என்னை ...

Read More »

UNP யுடன் புதிய கூட்டணி: சிறிய கட்சிகளின் நிலைப்பாடுகள்

party

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் பல ஜனாதிபதித் தேர்தலில் தமது ஒத்துழைப்பை வழங்குவதற்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. முதலில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவியுங்கள் அதன் பிறகு கூட்டணி குறித்து தீர்மானிப்போம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் ...

Read More »

சஜித் பிரேமதாச குறித்து லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து

lakshman-kiriella-0-300x189

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச கடந்த 20 வருடங்களாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதானது அவர் ஜனாதிபதியாவதற்கு மிகப் பெரிய தகுதியாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகமொன்றில் பெற்றுக் கொள்ளும் பட்டத்தை விடவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அடைந்து கொள்ளும் அனுபவம் பெறுமதி மிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ...

Read More »

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்

hajj

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 12 ஆம் திகதி என கொழும்பு பெரிய பள்ளிவாயல் இன்று அறிவித்துள்ளது. துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (02) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலும் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டுள்ளதனால், துல்கஃதா மாதத்தை 29 ஆக நிறைவு ...

Read More »

குண்டுத் தாக்குதல் நடாத்தியவர்களை விடவும் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கை ஆபத்து- ரத்ன தேரர்

athuraliye rathana thero

குண்டுத் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளை விடவும் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கை ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார். இன்று (02) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு நிதி ...

Read More »

என் குடும்பத்துக்கு எதிரான சதி அரசியலமைப்பில் – மஹிந்த ராஜபக்ஸ

mahindaaa

ஒரு குடும்பம் ஆட்சிக்கு வரக் கூடாது என்று இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமே 19 ஆவது திருத்தச் சட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தான் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக இரு முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை சேர்த்தனர். பசில், கோட்டாபய ஆகியோருக்காக வெளிநாட்டுப் பிரஜாவுரிமை என்ற ...

Read More »

எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன்- ஜனாதிபதி

Maithiri

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எடுக்க வேண்டிய அத்தனை நடவடிக்கையையும் நிறைவேற்றியுள்ள நிலையில், முதுகெலும்பில்லாதவர் என தன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாயின் நிச்சயமாக  அதன்பின்னால் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படவில்லையெனவும், நாட்டின் தலைவர்களுக்கு ...

Read More »

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னால் இருந்தவர்கள் போதைப் பொருள் வியாபாரிகள்- ஜனாதிபதி

Maithiri

யார் என்ன சொன்னாலும், கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம், சர்வதேச பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும் என்றே நான் கூறுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கையை திசை திருப்ப ஒரு சந்தர்ப்பமாக அதனைப் பயன்படுத்திக் கொண்டனர். என்னை அபகீர்த்திக்குட்படுத்த போதைப் பொருள் வியாபாரிகள்தான் அதனை முன்னெடுத்தனர் ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 11 பொலிஸ் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய நடவடிக்கை !

Police

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் பரிந்துரைக்கு அமையப் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் 11 பேரைக் கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமண்ணா மற்றும் முன்னாள் பொலிஸ் ...

Read More »